Sunday, November 23, 2008

லோஷன் விடுதலை!

ஒரு நற்செய்தி வெற்றி எப்.எம் முகாமையாளர் லோஷன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று நண்பகல் கொழும்பு நீதிவான் முன்னிலையிலே ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

தற்கொடைப்போராளி ஒருவரின் கைத்தொலைபேசியில் லோஷனின் தொலைபேசி இலக்கம் இருந்ததாம். மற்றும் மலேஷியாவில் இருக்கின்ற ஒரு தமிழீழ விடுதலைப்போராளி ஒருவருடனும் தொடர்பு இருந்ததாம்.

இப்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இனி அவரின் குரலின் வீச்சு சற்று ஒடுங்கித்தான் இருக்கும். இதுதான் இலங்கையின் ஜனநாயகம்.

சரி அவர் விடுதலை ஆகிவிட்டார்தானே. அவ்வளவும் இப்போதைக்கு போதும். ஆனால் இன்னமும் அந்த சிறைகளிலே வாடும் அப்பாவித் தமிழர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என நாம் பிரார்த்திப்போம்.

Sunday, November 16, 2008

லோஷன் கைது!

பிரபல தமிழ் அறிவிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.20 மணியளவில் சிறிலங்கா பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ வின் நேரடிக் கண்கானிப்பில் இயங்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால்(ரிஐடி) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவரது வசீகரமான குரலும், ஒலிபரப்ப்பின் போது பிசிறில்லாமல் உச்சரித்து வார்த்தைகளுடனான விளையாட்டும் தமிழ் பேசும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இவர் ஒரு வலைப்பதிவர். (அவரது வலைப்பூவிற்கு செல்ல)அண்மையில் 25000 வருகைகளை ஒரு பதிவாக இட்டவர். 3 மாத்திற்குள் இவரது வலைப்பூ பெரிய அளவில் எல்லோரையும் எட்டியது.

ஆரம்ப காலத்தில் சக்தி எவ்.எம் ல் பணிபுரிந்து பின்னர் முரண்பாடுகளுடன் வெளியேறி சூரியன் எவ்.எம் ல் பணிபுரிந்து அதிலிருந்தும் முரண்பாடுகளுடன் வெளியேறி தற்போது வெற்றி எவ்.எம் ல் பணிபுரிந்து வந்தார்.

இந்த ஊடகம் ஒரு அரச சார்பான ஊடகமாக இருக்கிறது என்பது எல்லோரினதும் கருத்து. இருந்தும் லோஷனின் வலைப்பூ எழுத்து இவரை ஒரு துணிகர எழுத்தாளனாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. இவரது ஒலிபரப்பின் போது சாடை மாடையாக அரசைத் தாக்குவதும் அவ்வப்போது இருந்து வந்தது.

முன்பு சூரியனில் இருக்கும் போதும் ஒருதடவை ரமணனுடன் செய்யும் நிகழ்ச்சிக்காக (நிகழ்ச்சியின் பெயர் நினைவில் இல்லை) பொறுப்பதிகாரிகளால் கண்டிக்கப்பட்டார்.

பின்னர் சூரியனில் காலையில் இவர் செய்யும் "சூரிய ராகங்கள்" நிகழ்ச்சியின் போது 'பேப்பர் பொடியனுடன்' சேர்ந்து பத்திரிகை கண்ணோட்டம் என சில தவறுகளை நக்கலுடன் நசூக்காக குறிப்பிட்டு வந்தார்.

ஒரு தேடல் கொண்ட வானொலிக் கலைஞன். நிறைய விடயங்களை வெளியே கொண்டு வருவார். இளையவர்களை ஊக்குவிக்கும் திறனும் நிறையவே இருந்தது. நல்ல மொழி ஆளுமை கொண்டவர். ஒலிபரப்பின் போது இவர் சொற்களில் தடங்கல் ஏற்பட்டது என்பதை விரல் விட்டு எண்ணலாம்.

சரி, இவரது கைதின் பின்னனி என்ன? முன்பு குருபரன் கடத்தப்பட்டார் 2006ம் ஆண்டின் பிற்பகுதியில். அங்கு அவரிற்கு 'புரியாணி' கொடுக்கப்பட்டதாக பின்னர் தகவல் கசிந்தது. ஆனால் குரபரனின் குரல் அத்தோடு நசுக்கப்பட்டே விட்டது. தற்பொழுதும் அவர் வானொலி ஊடகங்களில் பணிபுரிகிறாரா என எனக்கு தெரியவில்லை.

சில வேளைகளில் இவரிற்கும் புரியாணி கொடுக்கப்படலாம். ஆனால் எச்சரிக்கை எதுவெனில் "தம்பி றேடியோவில ஹலோ சொல்லி பாட்டை மட்டும் போடுங்கோ, கனக்க கதைக்க வேணாம்" என இருக்கலாம். விடுவிக்கப்பட்ட பின்னர் என்ன நடந்தது என அவரிடம் கேட்டால் 'என்னால் எதுவும் கூற முடியாது' என்பார். இவரது குடும்பம் சொல்லும் "தம்பி வெளிநாட்டை போங்கோ, எங்களுக்கு எல்லாம் காணும்". வேற வழியில்லை.

முன்னால் அரச வானொலியின் மிகப்பிரபல அறிவிப்பாளர் இப்போ சிறிலங்காவில் இல்லை.

சரி நான் என்ன சொல்ல வாறன்? ஒண்டும் இல்லைப்பாருங்கோ. இவங்களோட ஒண்டும் செய்ய முடியாது கண்டியளோ. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் எண்டும் பாசிசவாதிகள் எண்டும் சொல்லுற எங்கட ஆட்கள் இந்த இனவாத ராஜபக்ஸ அரசாங்கத்தை என்ன சொல்லப்போகினம்.

எத்தினை கொலைகள் நடந்திட்டு பாருங்கோ? எத்தினை விசாரனைக் கமிஷன் தொடங்கியாச்சு? உந்த சிறிலங்காதான் பாருங்கோ வேர்ல்ட் ல கூட விசாரனைக் கமிஷன் வச்சிருக்கிற அரசாங்கமா இருக்கும். ஒண்டும் முடிஞ்ச பாடில்லை. நிமலராஜன், நடேசன், தராக்கி சிவராம் அவன் இவன் எண்டு எல்லாரையும் போட்டுத்தள்ளிபோட்டாங்கள். ஆரேன் கேட்டால் "விசாரணைக் கமிஷன் போட்டிருக்கு இப்ப எங்களால் எதுவும் சொல்லேலாது" எண்டுவாங்கள். பிறகு ஊடக அமைப்புக்கள் ஒருக்கா வாயைக்கட்டி கையில ஒரு போர்ட்டையும் பிடிச்சுக்கொண்டு ஆர்ப்பாட்டம் ஒண்டு செய்வினம். அதோட எல்லாம் போவிடும் பாருங்கோ!

எங்கையும் வாழலாம் கண்டியளோ! இவனுகளோட இருக்கேலாதப்பா! ஆளைவிடு சாமி எண்டு எல்லாரையும் கலைக்கபோறானுகள். கரிகாலன் இவங்களை கலைக்கும் வரை இப்படிக் கைதுகள்,காணம்ல்போதல்கள், காலையில் சடலமாக இருத்தல் என்பன தொடரும்.

நோக்கம்...!

சில அரசியல்வாதிகளின் எண்ண ஓட்டங்களை இங்கே இடலாம் என நினைக்கிறேன்.

வணக்கம்!

உறவுகளே எனக்கு தெரிந்த இரகசியங்கள் இங்கே பரகசியமாகும். காத்திருங்கள்!