Wednesday, June 17, 2009

அனைவருக்கும் ஒரு செய்தி.....!

இந்த வலைப்பூவிற்கு சென்று எல்லோரும் பார்க்க வேண்டிய ஒன்று அதே நேரத்தில் இதனை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வலைப்பூவிற்கு செல்ல....!

காலத்தின் தேவை கருதி எழுத்தப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். குழப்பங்களுக்கு மத்தியில் சிலர் முட்டாள்தனமாக எழுதி காலம் காலமாக இருந்து வந்த தியாகங்களை கொச்சைப்படுத்த முயல்வதாக நான் நினைக்கிறேன். பிரபல தமிழ் இணையத்தில் வந்த ஒரு செய்திக்கான மறுவினை ஆக இருக்கிறது.

Thursday, May 28, 2009

ஊடகங்களின் வெறுக்கத்தக்க போக்கு...!

நேற்றைய தினம் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இரவு நேர செய்திகளை கேட்டிருப்பீர்கள். கேட்காதவர்கள் இங்கே சொடுக்குங்கள்.

இதிலே எத்திராஜ் அன்பரசன் என்ற பிபிசி யின் நிருபர் நிறைய கேள்விகளை கேட்கிறார். அதற்கு மக்கள் பதில் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அவரின் கேள்விகளின் ஆழம் புரியவில்லை. வவுனியா தடுப்பு முகாம்களில் இருப்பவர்களுடனான் நேர்காணல் அது. இப்போது அங்கே என்ன நடைபெறுகிறது என எல்லோருக்கும் தெரியும். எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். இருந்தும் இவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை அவர்கள் நன்றாக பயன்படுத்தி உள்ளே மக்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர முயன்றிருக்க வேண்டும்.

இவரின் கேள்வி உள்ளே உங்களுக்கு யார் 'ஷெல்' அடித்தார்கள்? (இவருக்கு தெரியாது தானே..!) விடுதலைப்புலிகள் சுட்டார்களா? அய்யா, அவர்கள் இப்பொழுது சந்திக்கும் வேதனைகளை முன்னாலே கொண்டு வாருங்கள். கடந்த காலங்களை இப்போது சற்று கைவிடுங்கள். எல்லாம் முடிந்த நிலையில் இருக்கிறோம். யாருமற்ற நிலையில் இருக்கிறோம்.

மதிய உணவு மாலை 4.00 மணிக்கு கிடைக்கும் அவலத்தை உலக்கு நன்றாக தெரியப்படுத்துங்கள். இரவு உணவு நள்ளிரவு நேரம் கிடைக்கும் அவலத்தை உலகுக்கு தெரியப்படுத்துங்கள். குடிக்க , குளிக்க தண்ணீர் இல்லை. இந்த இழிநிலையை உலகுக்கு தெரியப்படுத்துங்கள். ஒரு முட்டு குடிசைகள் போட்டு 3000 குடும்பங்கள் ஒரு மைதான வெட்டவெளிக்குள், வெயில் சூட்டுக்குள் வாழ்கின்றனவே அதனை தெரியப்படுத்துங்கள். எந்த அடிப்படை வசதிகளுமற்ற கையகலாதவர்களாக வாழ்கிறார்களே அதனை வெளிப்படுத்துங்கள்.

உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் அருமையான சந்தர்ப்பம். அதனை மிகச்சரியான முறையில் பயன்படுத்தி உலகிற்கு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுங்கள்.

அதை விடுத்து மீண்டும் மீண்டும் நீங்கள் விடுதலைப் புலிகள் மீது சேறு பூச வேண்டும் என்பதற்காக உங்கள் கேள்விகளை உருவாக்கி மக்களிடம் செலுத்தாதீர்கள். யுத்த சத்தங்கள் முடிவடைந்த இந்நிலையில் 'ஷெல்' அடித்தது யார் ? என்ற கேள்வி உங்களுக்கு தேவைதானா? எந்தக் குழந்தையும் பதில் சொல்லும். ஆனால் அந்த மக்கள் அங்கே இருக்கும் நிலை தெரியுமா? நீங்கள் கேள்வி கேட்டு விட்டு வந்துவிடுவீர்கள். அவர்கள்தான் அங்கே காணாமல் ஆக்கப்படுவார்கள்.

நீங்கள் அதி புத்திசாலிகள் என்று உம்மை நினைக்கலாம். ஆனால் அந்த மக்களின் பதில்களில் இருந்து புரிந்து கொள்வீர்கள், மக்கள் எவ்வாறு மிகக் கவனத்துடன் நடந்து கொள்கின்றனர் என்று.

நேற்று ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருக்கும் தெரியும் இலங்கையின் மனித உரிமை மீறல்களை. ஆனாலும் அங்கே அனைவரும் இலங்கையை வெற்றி பெறச்செய்திருக்கிறார்கள். உங்கள் அரசியல் இலாபங்களுக்காக ஒரு இனத்தை அழிப்பது சரியா? அது உங்கள் அகராதியில் நீதி என்று சொல்லப்படுகிறதா...?

பார்ப்போம் பொறுத்திருந்து. எல்லா முடிச்சுகளும் விரைவில் அவிழும். காத்திருப்போம். அன்று அழிந்து இந்தா இல்லை என்ற யப்பான் இன்று எழுந்து நெஞ்சை நிமித்து கொண்டு நிற்கிறார்கள். நாமும் நிற்போம்.

Thursday, April 23, 2009

அது போன வாரம்..! இது இந்த வாரம்...!!

ஈழத்தின் கிழக்கு பகுதியில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் இதுகாறும் இரண்டரை இலட்சத்திற்கு அதிகமான அப்பாவி பொதுமக்கள் வசித்து வந்தனர். இன்று அவர்களில் சுமார் ஒரு இலட்சம் மக்களை வல்வளைப்பு செய்து அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறது. இவர்கள், ஒரு வருடத்திற்கும் மேலாக மன்னார், வவுனியா போன்றவற்றில் இருந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து பின்னர் கிளிநொச்சி வந்தடைந்து அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து, அங்கிருந்து இறுதியாக சிறீலங்கா அரசு அறிவித்த பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அண்மைக்காலமாக வாழ்ந்து வந்தவர்கள்.

இங்கு வாழ்ந்து வந்த மக்களின் எண்ணிக்கையில் கொழும்பு அரசு எப்போதும் முன்னுக்கு பின்னான தகவல்களையே வழங்கி வந்தது. இந்த மக்களின் உண்மையான தொகையினை அந்த அரசால் அறிய முடியாத ஒன்றல்ல. மாவட்ட அரச அதிபர்கள் மூலமும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமும் அறிந்திருக்க முடியும். ஆனால் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்கில் குறைவான எண்ணிக்கையையே (ஆயிரக்கணக்கில்) தெரிவித்து வந்தது. காரணம் உலக நாடுகளின் மனிதாபிமானம் குறித்த எச்சரிக்கையாகும். இருந்தும் விடுதலைப்புலிகளும் அங்கிருக்கும் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினருமான கனகரத்தினம் அவர்களும் சரியான தொகையினை(இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான) தெரிவித்து வந்தனர். இதை சர்வதேசமும் செவிமடுக்கவில்லை. மாறாக அது கொழும்பின் மாயவலைக்குள் தன்னை மாய்த்து கொண்டது.

நேற்று சிறிலங்கா அரசு அறிவித்த தொகையில் ஒரு இலட்சம் மக்கள் பாதுகாப்புத்தேடி இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளனர் என்று அறிவித்துள்ளது. எந்த ஒரு ஊடகமும் இது குறித்து அவர்களை கேள்வி கேட்கவில்லை. முன்னர் ஒரு எழுபத்தையாயிரம் மக்களே உள்ளனர் என்று தெரிவித்து வந்த சிறீலங்கா அரசு இப்போது ஒரு இலட்சம் மக்கள் தமது பிரதேசத்துக்குள் வந்துவிட்டார்கள் என்கிறது. மேலும் அங்கே ஒரு சில ஆயிரம் மக்களே உள்ளனர் என்றும் கூறியுள்ளது. ஆனால் பன்னாட்டு செஞ்சிலுவை அமைப்பு மேலும் ஒரு அம்பதினாயிரம் மக்களுக்கு மேல் இருப்பதாக சொல்லியுள்ளது.

இலங்கை அரசு தமிழ்மக்களின் எண்ணிக்கையில் அவ்வப்போது தவறான தகவல்களை தெரிவித்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வந்துள்ளது. வெறும் அம்பதினாயிரத்திற்கும் குறைவான மக்களே இருந்தனர் என்று தனது கபடத்தன பிரச்சாரத்தை செய்து வந்தது. ஆனால் இப்போது அங்கிருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கையுடன் சிறிலங்கா அரசின் முகமூடி மீண்டும் ஒருதடவை கிழிந்துள்ளது.

(இது பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் வந்த செய்தி.....)

ஹெகலிய ரம்புக்வெலவிடமோ அல்லது கோத்தபாய ராஜபக்ஷவிடமோ அல்லது சரத் பொன்சேகாவிடமோ ஒரு கேள்வியை கேட்டால் "இப்போது வந்துள்ள மக்களின் தொகை, நீங்கள் முன்பு சொன்ன மக்களின் தொகையை விட பன்மடங்கு அதிகம். அதிலும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மேலும் 50000 ற்கு மேல் உள்ளது என்கிறது. உங்கள் கணக்கெடுப்பு பிழையே." அதற்கு அவர்கள் "அது போன வாரம்...இது இந்த வாரம்..முன்பு 40000 மக்கள் தான் இருந்தனர். இப்போது ஒரு இலடசம் மக்கள் வந்துள்ளனர். எமக்கும் குழப்பமாகத்தான் உள்ளது. இப்போழுது மேலும் ஒரு பத்தாயிரம் அளவிலான மக்கள் தான் இருப்பார்கள். அவர்களையும் விரைவில் மீட்டுவிடுவோம்."

இவர்கள் எப்போதும் நகைச்சுவைக்காரர்கள். இதிலே சர்வதேசம் மயங்கி அமிழ்ந்து போவதுதான் விந்தை.....!

Thursday, April 16, 2009

சக வலைப்பதிவர் உண்ணாவிரதம்.....!

அல்லும் பகலும் செத்து மடிந்து கொண்டிருக்கு ஈழத்தமிழன் நிலை மிகவும் வருந்தத்தக்கது. களத்திலே அவர்களின் துயரை எல்லாம் புலத்திலே வாழும் எம்தமிழ் உறவுகள் இந்த உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றனர். ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரச அலுவலக முற்றுகை, தனித்தனியான பிரசாரம் என அவர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு செய்து கொண்டே இருக்கிறார்கள். இப்போது ஏராளமான இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற அகிம்சை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.

இதன் ஓர் அங்கமாக ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் இளம் பத்திரிகையாளரும் சக வலைப்பதிவாளருமான தெய்வீகன் மற்றும் 3 பேரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இவரது பத்தி எழுத்துக்கள் குறிப்பாக தமிழ்நாதம் இணையத்தளத்தில் வெளியாகுவது அனைவரும் அறிந்ததே. இதை தவிர அங்குசம், அலையோசை என்ற இரு வலைப்பூக்களும் இவருக்கு சொந்தம்.

-----------------------------------------------------------------------------------

1987 ம் ஆண்டு தியாகி திலீபன் தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்திலே எம் ஈழத்தமிழ் உறவுகளை கேட்டுக்கொண்டது இந்த மக்களின் எழுச்சியைத்தான். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்" இதுதான் திலீபனின் தாரக மந்திரம். அது இன்று புலம்பெயர் நாடுகளில் நடந்துகொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக தாயகத்தில் இந்த எழுச்சி உருவாக முடியாத சூழல். இன்று அனைத்து மக்களும் தங்களால் என்ன முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில் அவர்களின் இந்த அளப்பரிய செயலுக்கு நிச்சயம் பலன் உண்டு. இதை தடுக்கவும், குழப்பவும் சிறி லங்கா அரச தூதுவராலயங்கள் பகிரதப்பிரயத்தனம் மேற்கொள்ளுகின்றனர். இருந்தும் ஆத்மார்த்தமான மக்களின் எழுச்சியை இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அது முடியவே முடியாது. இருந்தும் திரை மறைவில் அந்தந்த நாட்டு அரசுக்கு நச்சரிப்பதும் போட்டு கொடுப்பதும் என தன்னுடைய 'நரி' வேலைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

மக்களின் இந்த உளப்பூர்வமான எழுச்சிக்கு முன்னால் எல்லாம் தூசி என்பது அந்த வெள்ளைக்கார துரைக்கு மிக நன்றாக தெரியும். அவர்களும் இந்த உணர்வு பூர்வமான எழுச்சி போராட்டங்களையும், கோரிக்கைகளையும் நன்றாகவே அவதானித்து வருகிறார்கள். இந்த போராட்டங்கள் உடனடியாக எமக்கு ஏதாவது பெற்றுதர வேண்டும். இல்லையேல் அங்கு எமது வன்னி மக்கள் உயிர்களை குடிக்க சிறிலங்கா அரச படைகள் தயாராக உள்ளன. காலத்தை சிறிதளவு தன்னும் விரயமாக்காமல் விரைந்து நடவடிக்கை எடுப்போம். அந்தந்த நாடுகளில் எமது மக்களின் அமைப்புகள் என்ன என்ன செய்கிறார்களோ அதனோடு நாமும் இணைவோம். எம் மக்களைக் காப்போம். தாயகத்தை மீட்போம்.

-------------------------------------------------------------------------------------------

கடந்த வருடம் மாவீரர் தின உரையில் தேசியத்தலைவர் அவர்கள் இறுதியாக ஒன்றை தெரிவித்தார். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இளையோருக்கு நன்றி தெரிவித்தும் தொடர்ந்தும் தமது முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த தலைவனின் ஆணையை இன்று புலத்தில் வாழும் அனைத்து இளையோரும் நிறைவேற்றத் துடிப்பது போற்றுதலுக்குரியதே.

அன்பான உறவுகளே! இப்பொழுதுதான் பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரனின் உடல் நிலை மோசமடைவதாகவும் மக்கள் கண்ணீரோடு கனத்த இதயங்களோடு பார்வையிட்டு வணங்குவதாகவும் செய்தியை வாசித்தேன். நெஞ்சு உடைகிறது. துக்கம் தாள முடியவில்லை.

---------------------------------------------------------------------------------------

இன்றும் விடுதலைப் புலிகளின் பழைய பிழைகளை பேசி மகிழ்வோரும் (கலைஞர் ஐயா உட்பட), தற்கால பின்னடைவுகளை கண்டும் உள்ளம் பூரிப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை விட்டு விடுங்கள். இவற்றை கருத்திலே எடுக்காமல் நடவடிக்கைகளை செய்வோம். எமக்கான காலம் காத்திருக்கிறது. களத்திலேயும், தளத்திலேயும் வெல்வோம்.

"தமிழரின் தாகம்! தமிழீழ தாயகம்!!"

Thursday, January 29, 2009

எமக்காக நாம்.....! ஈழத்தமிழன் ஒருவனின் குமுறல்..!!

எம்மை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என பன்னாட்டு சமூகம் சொல்கிறதா? நேற்று முன்தினம் 300 பேர். நேற்று 46 பேர். (தமிழ்வின்). இன்று உலக நாடுகளிடம் இருந்து அறிக்கை வரும் என எதிர்பார்த்தோம். எதுவுமில்லை. போதாக்குறைக்கு இலங்கை வந்து போன பிரணாப் முகர்ஜி "உப்பிடி ஒரேயடியா பொசுக்காதேங்கோ, கொஞ்சம் கொஞ்சமாக செய்யுங்கோ அப்பிடி எண்டால்தான் கொஞ்சம் கதை அமரும்" எனபது போல வந்து சொல்லிவிட்டு போகிறார். வந்த மனுஷன் ஒரு கண்டன அறிக்கை கூட விடேல்ல பாருங்கோ.

என்னதான் இருந்தாலும் தமிழ் எம்.பி க்களை சும்மா சந்திச்சு, வேணாம் பார்த்திட்டு கூட போயிருக்கலாம். அதை கூட செய்யல மனுஷன். இதுக்கிடைல அவர் விடுதலைப் புலிகளை அழிச்சுப்போட்டு ஒரு அரசியல் தீர்வை முன் வையுங்கோ எண்டு கூட சொல்லிப்போட்டு போயிருக்கிறார். யாருடன் அந்த தீர்வு பற்றி கதைப்பார்கள்?. யாருக்கு அந்த தீர்வு? இனி நீங்கள் என்ன சொன்னாலும் அந்த சோனகிரி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளுவினம், எண்ட மாதிரி கதை போகுது.

சரி, தமிழகத்துல இருந்து இதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஒரு கண்டன அறிக்கை. ம்கூம். ஒரு எழுத்து, ஒரு குரல் கூட வரலை. எல்லா இணையங்கள், எல்லா வலைப்பூக்களும் அந்த அழுகுரலை, அவலக்குரலை, ஒளிப்படங்கள், எல்லாம் பிரசுரித்தும் இன்னமும் எதுவும் நடக்கவில்லை. இன்றும் கூட தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதற்கேற்ப புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் உறவுகள்தான் கண்டன போராட்டங்கள், அறிக்கைகள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என மனம் தளராமல், தளர்ச்சி என்பது இல்லாமல் தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்.தமிழகத்தை சேர்ந்த ஈழத்தமிழ் ஆதரவு அரசியல்வாதிகள் எல்லாம் சிறிது காலத்திற்கு முன்பு , ஆயுதம் ஏந்துவோம், எமது உயிரைவிடக்கூட தயாராக இருக்கிறோம், அப்பிடி இருக்கிறோம், இப்பிடி இருக்கிறோம் என எத்தனை வீர வசனங்களை முழங்கித்தள்ளினார்கள். அய்யா உங்கள் இந்த ஆதரவைத் தான் அங்கே குண்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் எம்தேசத்து உறவுகள் எதிர்பார்த்து நம்பி இருந்தனர்.

உங்கள் உயிர் வேண்டாமையா! உங்கள் ஆயுதம் தாங்கிய கரம் வேண்டாமையா!! ஒரு அறிக்கை கூடவா விட துப்பில்லை. அவ்வளவு மோசமாகி போய்விட்டோமா ஈழத்தமிழர் ஆகிய நாம்?

தமிழக அரசையோ, மத்திய அரசையோ கவிழ்க்க எந்த விதத்திலும் துணை போக மாட்டோம். ஆனால் ஈழத்தமிழருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். இது மருத்துவர் இராமதாசு அய்யாவின் நிலைப்பாடு. யோசித்து பாருங்கள் அவரின் இந்த நிலைப்பாட்டால் என்ன பலன் விளைந்தது. எதை நாம் கண்டோம். இதையே இராமதாசு அவர்கள் தன் மகனை இராஜினாமா செய்ய வைத்து, முன் மாதிரியாக இருந்தால் நாம் அவரைப் போற்றியல்லவா இருப்போம். என்ன வேண்டுமானலும் செய்ய வேண்டாமையா எங்களுக்கு. உங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள். அது போதும். ஏனய்யா பயப்படுகிறீர்கள். இன்னும் 5 மாதம் கூட இல்லாத பதவிக்காலம். இதை கூட உங்களால் விட்டுத்தர முடியவில்லை. எப்படி ஐயா உயிரைத் தரப்போகிறீர்கள். சிறிலங்கா இராணுவத்தளபதி நல்லாத்தானய்யா சொல்லி இருக்கிறான். அதுக்கு பிறகும் உங்களுக்கு சூடு வரலையே. ஆக உங்கள் ஈழத்தமிழருக்கான ஆதரவு சாப்பிட்டுவிட்டு பீடா சாப்பிடவது போலத்தான்.


அப்பாவி தமிழக மக்களின் அந்த புனிதமான உணர்வுகளை மழுங்கடிக்காதீர்கள். அவர்கள் உங்களை (தமிழக அரசியல்வாதிகள்) விட எங்களை நம்புகிறார்கள். எமக்காக எத்தனையோ செய்தார்கள். அவர்களின் அந்த புனித உறவை நாம் மதிக்கிறோம். உங்கள் அரசியல் முக்கியம் என்பதை நாம் உணருகிறோம். எமக்காக உங்களின் முழுமையான ஆதரவால் உங்கள் அரசியல் வாழ்வில் எந்த களங்கமும் ஏற்படாது. எமது ஈழத்தமிழ் மக்களுக்காகத்தான் நான் எனது பதவியை துறந்தேன் என்று நீங்கள் கூறுவீர்களேயானால் அந்த தமிழக மக்கள் நிச்சயமாக அடுத்து வரும் தேர்தலில் உங்களின் இருப்பை உறுதிப்படுத்துவார்கள். ஒரு பதவிக்காக உங்களுக்கு பத்து பதவிகள் கிடைக்கும். தமிழக மக்கள் ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் அல்லர். நீங்கள் முதலில் செய்யுங்கள். கலைஞர் சொல்வாராம். பதவி என்பது எனக்கு சால்வை. ஆனால் கொள்கை,இலட்சியம் எனது வேட்டி. ஆனால் நடவடிக்கை. மாறித்தான் இருக்கிறது. எடுக்கும் முடிவுகளை சும்மா உதறித்தள்ளிவிட்டு போகிறார். (ஐயா கனகாலமா கவிதை ஒண்டையும் காணலைங்கோ சாமியோவ்...!)இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஒரு போராட்டம் நடாத்தியிருக்கலாமே. அல்லது இலங்கை அரசிற்கு உறைக்க கூடிய விதத்தில் ஏதாவது செய்து இருக்கலாமே. இல்லையே. உங்கள் தமிழ்நாட்டுக் கடல் மூலமாகத்தான் இராணுவ கவசவாகனங்கள் வந்தன என தினத்தந்தி நாளேடு தனது 26-01-2009 பிரதியில் படம் மூலம் புட்டுப்போட்டது. நாம் ஆயுத உதவி செய்யவில்லை என்ற மத்திய அரசின் கூற்று பொய் என்று சொல்வதை நிரூபிக்க இதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் தலைவன் எடுக்கும் அந்த காட்டமான முடிவால் வரும் எல்லா எதிர் விளைவுகளையும் எல்லா மக்களும் அனுபவிக்கத்தயாராக இருக்க வேண்டும். அதுதான் நியதி. காத்திருப்போம் அந்தக் கணத்திற்காக. வெல்வோம். வாழ்வோம். வரலாறாவோம்."தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

Tuesday, January 27, 2009

புலிகளின் பின்னகர்வு: விடை தெரியாத கேள்விகள்

இது எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு கட்டுரை. எவர் இதை வரைந்தாலும், அது எந்த ஊடகத்தில் வந்தாலும் அனைத்திற்கும் நன்றிகள்.
============================================================================
நேற்றுக் காலையில் என்னோடு கதைத்த கவிஞர் ஒருவர் "பிரபாகரனைப் பிடித்துவிடப் போவதாகச் செய்திகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே.... வேதனையாக இருக்கிறது"என்று சொன்னார். எனக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது… தலைவர் பிரபாகரனைப் பிடித்துவிடுவார்கள் என்பதனால் அல்ல; 'பிடித்துவிடுவோம் விடுவோம்' என்று முழக்கமிடும் பேரினவாதிகளையும், அவர்கள் வாய்மொழியும் செய்திகளின் உண்மையைச் சற்றும் உய்த்தறியாமல் பரப்பும் ஊடகவியலாளர்களையும் பார்த்துத்தான் வேதனையாக இருக்கிறது. அவரைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்பதா அல்லது இலங்கையே வைத்துக்கொள்வதா என்பதும் சர்ச்சைக்குரிய ஒன்றாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. குரங்கு அப்பம் பிரிக்கிற கதை காரணமில்லாமலே ஞாபகத்திற்கு வருகிறது. சடுதியான மறதியில் வீழ்ந்து மக்கள்தான் வாக்களித்துத் தொலைக்கிறார்கள் என்றால், அரசியல்வாதிகள் அவர்களுக்குமேல் வரலாற்று மறதி நோயால் பீடிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். 'பிரபாகரனைப் பிடிப்பது'என்ற விடயத்தை ஏதோ பட்டாம்பூச்சியைப் பிடிப்பதுபோல மெத்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அமைதிப் படையாக இலங்கையில் காலடி வைத்த இந்திய இராணுவம் அழிவுப்படையாக மாறி பேரனர்த்தங்களை விளைவித்தபோது, பிரபாகரன் அவர்களும் ஏனைய போராளிகளும் காட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது நாமெல்லோரும் அறிந்ததே. போராளிகளை மரணம் நிழலெனத் தொடர்ந்த காலமது. அந்நாட்களில் பிரபாகரன் அவர்களது மெய்க்காவலர்களில் இருவர் கைகளில்'பெற்றோல்'குடுவைகளுடன் எப்போதும் தயார்நிலையில் இருந்தார்கள். காரணம், "நான் குண்டடிபட்டோ வேறெவ்வகையிலோ இறந்துபோக நேர்ந்தால் எனது உடல்கூட அவர்களது கைகளில் சிக்கக்கூடாது. நீங்கள் தற்கொலை செய்துகொள்வதாயின் எனது உடலைக் கொழுத்திய பின்னரே செய்துகொள்ளவேண்டும்"என்று அந்த இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுக்கும் அவர் பணித்திருந்தார். உயிரற்ற தனது உடல்கூட கைப்பற்றப்படக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருந்தவரா உயிரோடு பிடிபடுவார்? ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தினை நசுக்குவதில் காட்டும் மும்முரத்தை ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்றை நினைவுகொள்வதிலும் காட்டினால் நன்று.
"எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சமரசத்திற்குட்படாத, விலைபோகாத ஒருவரின் வழிநடத்தலில் இயங்கி, உலகத்திலுள்ள போராளி அமைப்புகளில் போர்த் தந்திரோபாயத்திலும் அர்ப்பணிப்பிலும் சுயகட்டுப்பாட்டிலும் தீரத்திலும் முதன்மையானது என்று எதிரிகளையே வியப்படைய வைத்தவர்களுமான விடுதலைப் புலிகள் தமிழர் தாயகப் பிரதேசங்களை ஒவ்வொன்றாக எதிரிகளின் கைகளுக்கு விட்டுக்கொடுத்துப் பின்னகர்ந்து செல்வது எதனால்?"என்பதுதான் இன்றைய மில்லியன் டொலர் கேள்வியாகும்.
உலகின் நான்காவது பலமான இராணுவம் என்று அறியப்பட்ட இந்திய இராணுவம் 'இனி முடியாது' என்று திரும்பிச் சென்றதை நாமறிவோம். 1,80,000 வரையிலான எண்ணிக்கையுடைய இராணுவ பலத்தை (இந்தியா போன்றவர்களின் படையுதவிகள் தவிர்த்து) தன்னகத்தே கொண்டதும், பாதுகாப்புச் செலவினமாக ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடி ரூபாவை வாரியிறைத்து வருவதுமான இலங்கை அரசுக்கு இருபத்தைந்தாண்டு காலமாக கண்மூடினால் புலிச்சொப்பனமாக (இது சிம்மசொப்பனமல்ல) விடுதலைப் புலிகள் இருந்துவருவதை நாமறிவோம். 1995ஆம் ஆண்டு ரிவிரச எனப் பெயர் சூட்டப்பட்ட பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையின் விளைவாக இலட்சக் கணக்கான தமிழர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இரவோடிரவாக பெயர்ந்து வன்னி நோக்கி நகர்ந்துபோன பேரவலம் நிகழ்ந்தது. அப்போது முல்லைத்தீவில், பூநகரியில், ஆனையிறவில் பலம்வாய்ந்த இராணுவ முகாம்கள் இருந்தன. 'அசைக்க முடியாது' (டி.சிவராம் அவர்களின் வார்த்தைகளில்)என்று அமெரிக்காக்காரனே வந்து பார்த்து தரச்சான்றிதழ் வழங்கிவிட்டுப் போன ஆனையிறவையே புலிகளால் அசைக்க முடிந்தது. முல்லைத்தீவு, பூநகரி இராணுவ முகாம்களும் புலிகளிடம் வீழ்ந்தன. இவ்வாறாக வெல்லுதற்கரியவர்கள் என்று பெயர்பெற்ற விடுதலைப் புலிகள் மாங்குளம், மல்லாவி, கிளிநொச்சி, முகமாலை என்று தொடர்ச்சியாக விட்டுக்கொடுத்தபடி பின்னகர்ந்து செல்லும் மாயந்தான் என்ன?
தொடர்ச்சியான போரினால் விடுதலைப் புலிகள் சோர்வடைந்து பலமிழந்து போனார்கள் என்பதை நம்பமுடியாதிருக்கிறது. 'கிளிநொச்சி வீழ்ந்தது' என்ற செய்தி சாதாரணர்களையே சாய்த்திருக்கிறது. அந்நகரை மையமாகக் கொண்டியங்கிய புலிப்போராளிகளுக்கு அது தாய்மடி போல. அதை விட்டுக்கொடுத்து நகரும்போது உலைக்களம் போல அவர்களது நெஞ்சம் கோபத்தில் கொதித்திருக்குமேயன்றி, ஓடித் தப்பினால் போதுமென ஒருபோதும் அவர்கள் கருதியிருக்கமாட்டார்கள். கரும்புலிகள் என்று தனியாக சிறப்புப் படையொன்று இருக்கின்றபோதிலும், விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள அனைத்துப் போராளிகளும் எந்நேரமும் தம்முயிரைத் தற்கொடை செய்யத் தயாரான கரும்புலிகள்தாம். கழுத்தில் சயனைட் குப்பி வடிவில் சர்வசதாகாலமும் மரணத்தைச் சுமந்து திரிகின்றவர்கள்தாம். அசாத்திய மனோபலமுடைய அதிமானுடர்களாக அறிந்தவர்களால் வியக்கப்படுகிற அவர்களால் இம்முறை மட்டும் தாக்குப்பிடிக்க முடியாமற் போனதென்பது வியந்துமாளாத ஒன்றாக இருக்கிறது.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வரலாறு தன் எழுதுகோலோடு கவனித்துக்கொண்டிருக்கிறது. இழப்பின் துயர் செறிந்த தூங்காத விழிகளோடு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிக் களிப்பில் வெறியுமிழும் பேரினவாதத்தின் கண்கள் மட்டும் மூடியிருக்கின்றன.
பின்னகரப் பணித்த பிரபாகரன் அவர்களது மனதுள் என்னதான் இருக்கிறது? கடலுக்குள் குதிக்கப்போகிறார்; கைதாகப் போகிறார் இன்னபிற சிறுபிள்ளைத்தனமான பிதற்றல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் அவரது வியூகத்தின் மையப்புள்ளிதான் என்ன?
போர் என்ற புதிர் இம்முறை அவிழ்க்கப்பட முடியாததாக இருக்கிறது. மௌனத்தின் அடர்த்தியானது கேள்விகளைத் தூண்டுகிறது. ஊகங்களை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது.
எதிரியைத் தேடிப்போய் சண்டை பிடித்தது போதும்; அவனை நமது காலடியில் கொண்டுவந்து தலையில் மிதிப்பதுதான் தகும் என்ற தந்திரோபாயம்தான் உள்நகர்ந்து உள்நகர்ந்து சென்றதன் பின்னிருக்கும் காரணமா? குழலூதிச் செல்பவனைத் தொடர்ந்துபோய் தண்ணீருள் விழும் எலிகளாகிவிட்டனரா சிங்கள இராணுவத்தினர்? தென்னிலங்கையில் ஏதாவது தாக்குதல்கள் நடத்தவேண்டியிருந்தால் திசமகராம, கதிர்காமம் போன்ற காட்டுப்பகுதிகளுள் சென்று, பல நாட்கள் தங்கி, உளவு அறிந்து, அப்பகுதிகளில் வாழும் வேடுவர்களைத் துணைக்கழைத்து நீர்நிலைகள் அறிந்து, உணவு பெற்று…அரும்பாடுபடவேண்டும். தவிர, எவரேனும் காயப்பட்டால் தூக்கிவர இயலாது. முதலுதவி தவிர்த்து வேறெந்த சிகிச்சை வசதிகள் இரா. காடுகளில் வழி தடுமாறி அலையவும் நேரிடும். மாறாக போராளிகளுக்கு தமிழ்ப்பகுதிகளின் ஒவ்வொரு அங்குலமும் இங்கே கிணறு, இங்கே கடப்பு என்று கண்பாடம், கால்பாடம். இவ்வாறான நிலையில் ஏன் எதிரிகளின் கோட்டைக்குள் சென்று சென்று தாக்க வேண்டும்? போரைத் தமிழர்களின் எல்லைகளுள் நகர்த்திவிட்டால்…என்று நினைத்திருக்கலாம்.
இப்போது முன்னரங்க நிலைகளில் சண்டை போடுவது மட்டுந்தான் இலங்கை இராணுவத்தினரின் வேலையன்று; பிடித்த இடங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் வேண்டும். முழுப்படையினரையும் முன்னரங்கத்தில் குவிப்பதாயின் முதுகிலும் கண் இருந்தால்தான் சாத்தியம். ஆக, தக்கவைத்துக்கொள்வது, சண்டை பிடிப்பது என்ற இருவேறு திசைகளில் படையினரின் கவனம் சிதறுகிறது. தமிழர்களை ஒரு குறிப்பிட்ட சதுர கிலோ மீற்றரினுள் தள்ளியதன் மூலம் உச்சபட்ச இனவழிப்பைச் சாத்தியமாக்கியிருப்பதாகச் சிங்களப் பேரினவாதம் கருதுகிறது. ஆனால், மறுவளமாக, புலிகளது கண்காணிப்பை வேண்டும் சமராடுகளத்தின் எல்லைகள் சுருங்கியிருக்கின்றன. ஆனால், இலங்கை இராணுவத்தின் சமராடுகளம் விரிந்திருக்கிறது. ஒவ்வொரு அங்குலத்திலும் படையினரை நிறுத்திவைக்க வேண்டிய பதட்டத்தினுள் அவர்களைத் தள்ளியிருக்கிறது. இது விடுதலைப் புலிகளுக்குச் சாதகமானதாகவே இருக்கும்.
விடுதலைப் போராட்டத்தை இனவெறி அரசிடம் காட்டிக்கொடுத்த கருணாவின் கைங்கரியத்தினால், அவர் சொல்லும் தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே இராணுவத்தினரால் முன்னேற முடிகிறது என்றொரு கதையும் உண்டு. ஆனால், அது முற்றுமுழுதான உண்மையன்று. இயக்கத்தின் ஓர்மத்தை அறிந்த கருணாவுக்கே புலிகளின் பின்னகர்வு வியப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. நகர்வதுபோல் போக்குக் காட்டிக்கொண்டு ஒவ்வொரு தாக்குதலிலும் ஐம்பது அறுபது எனப் படையினரைப் பலிகொள்வதானது வெற்றிக் களிப்பில் மூழ்கியிருக்கும் பேரினவாதிகளின் கண்களில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு – விடுதலைப் புலிகள் படைபல ஆயுதபல ரீதியாக இத்தனை வளர்ச்சியுற்றிருக்காத ஒரு காலகட்டத்தில் பலாலி விமான நிலையத்தில் சென்று இறங்கிய இராணுவ விமானங்களைச் சுட்டுத் தரையிறக்கவும் தலைசுழலவும் வைக்க முடிந்திருந்தது. இப்போதோ ஒரு உலங்குவானூர்தியைக் கூட அவர்கள் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் இல்லை. பத்துத் தடவைகளுக்கு மேல் தென்னிலங்கையில் உயிர்மையங்களில் தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாகத் திரும்பிவந்த விடுதலைப் புலிகளின் விமானங்களால், இந்த இக்கட்டான சூழலில் எதிரிப்படையின் மேல் சென்று இறங்கமுடியாதிருப்பது எதனால்? புலிகளின் ஆறு விமான ஓடுபாதைகளைப் பிடித்துவிட்டோம் என்று முழங்கும் அரச பீரங்கி, அந்த ஓடுபாதைகளில் ஓடிய விமானங்கள் எங்கு போயின என்பதைப் பற்றிக் கள்ளமௌனம் சாதிக்கிறது. (விமான ஓடுபாதைகளில் விடுதலைப் புலிகள் மோட்டார் வண்டிகளைத்தான் ஓட்டிக்கொண்டிருந்தார்கள் என்று கோத்தபாய ராஜபக்ஷ என்ற கோயபல்ஸ் சொன்னாலும் வியப்பதற்கில்லை.) அப்படியானால், விமானங்கள் எந்தவொரு கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன?மீண்டும் அந்த மில்லியன் டொலர் கேள்விக்குத் திரும்புகிறோம். 'எப்படிப் பின்னடைந்தார்கள்?'என்ற கேள்வி பிரபாகரன் அவர்களையும் விடுதலைப் புலிகளையும் அறிந்த பலருள்ளும் விடையற்று அலைந்துகொண்டிருக்கிறது. உலகெங்கிலும் பரவலாக வாழ்ந்துகொண்டிருக்கும்; தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும்போது இந்தக் கேள்வியை ஒருவர் கண்களில் மற்றவர் காண்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தின் முன்னணியில் போராளிகள் நின்றிருந்தார்கள் எனில், பொருளாதார மற்றும் பின்பலமாக இருந்தவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், விடுதலையைத் தமது அரசியல் ஆதாயங்களுக்காக மலினப்படுத்தாத தமிழகத்தைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணத்தகுந்த சில அரசியல்வாதிகளும், இனப்பற்றாளர்களும், மத்திய அரசுக்குக் கட்டுண்டு இன்று கையறு நிலையில் கவலையோடிருக்கும் ஆறரைக் கோடி தமிழர்களுந்தான் இந்த வாழ்வுரிமைப் போராட்டத்தின் ஆதாரமாக பின்னணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.
நேற்று கனடாவிலிருந்து தொலைபேசிய ஒரு நண்பர் சொன்னார் "நாங்கள் இடிந்துபோயிருக்கிறோம். சரியாக உறங்கி நீண்ட நாட்களாகின்றன. ஒரு மகத்தான, எதிர்பாராத திருப்பத்திற்காகக் காத்திருக்கிறோம்"
"எனது எண்பத்து நான்கு வயதான தாயார் சரியாகச் சாப்பிடுவதோ உறங்குவதோ இல்லை… எங்கள் பிள்ளைகள் தோற்றுப்போனார்களா? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறார்" என்றார் மற்றொருவர்.
"பிரபாகரன் திறமையான இராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல; அரசியல் நுணுக்கமும் அறிந்தவர். மாறுகின்ற உலக நடப்புகள் எப்படியெல்லாம் தமிழர்களின் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதில் தீர்க்கமான ஞானம் உள்ளவர். ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அமெரிக்கா, இந்தியா நிலைமைகள் தெரிந்தபின்பு, அடுத்த நகர்வை நோக்கிய முக்கியமான முடிவை பிரபாகரன் எடுப்பார்"என்று அண்மையில் இணையத்தளச் செவ்வியொன்றில் இந்தியப் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் சொல்வதற்கிணங்க தகுந்த தருணத்திற்காக பிரபாகரன் காத்திருக்கிறாரா? உலக வல்லரசுகளில் முதன்மையானதும், சகல நாடுகளையும் அதட்டி உருட்டி அவற்றின் தலைவிதியை நிர்ணயிப்பதுமான அமெரிக்காவில், அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒபாமா, இருபது இலட்சம் பேர் முன்னிலையில் அமெரிக்க அதிபராக அண்மையில் பதவியேற்றார். 'அடிவாங்கியவனுக்கே வலி தெரியும்'என்ற கூற்றினை பிரபாகரன் அவர்கள் சிந்தித்திருக்கக்கூடும். 'அடித்துப் பிடிக்க எங்களால் முடியும்; அங்கீகாரம் வேண்டும்'என்பது அவரது இன்றைய நிலைப்பாடாக இருக்கலாம்.
ஊகங்களும், கேள்விகளும், ஆதங்கமும், ஆற்றாமையும், துயரமும் சூழ்ந்திருக்கும் இக்கொடுங்காலத்தை ஒரு இமைத்திறப்பில் கடந்து மகிழ்ச்சிக்குள் நுழைந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
நிச்சயமாக அது நடக்கும் என்றே உள்ளுணர்வு கூறுகிறது. இறந்தகாலத்தின் அற்புதங்கள் 'கலங்காதீர்'என்று கண்துடைக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல், உக்ரேன் என இலங்கையின் இனவழிப்புப் போருக்கு முண்டுகொடுக்க, தாங்கிப்பிடிக்க, தட்டிக்கொடுக்க பல நாடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அதனைக் காட்டிலும் அதிகமான நாடுகளில் (ஜேர்மனி, கனடா, இலண்டன், இந்தியா, சுவிஸ், நோர்வே, அமெரிக்கா…) 'டயஸ்போரா'க்களாய் நாங்கள் இருக்கிறோம். எங்களோடு சத்தியம் இருக்கிறது. 'வேடிக்கை மனிதரைப் போல்' நாங்கள் ஒருபோதும் வீழ்ந்துவிட மாட்டோம்.

Monday, January 19, 2009

ஈழப்போராட்டத்தின் இன்றைய யதார்த்தம்

தமிழ்நாதம் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட, ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் அவசியமான கடிதம். இங்கே வலைப்பூ வாடிக்கையாளர்களுக்காக மலர்கிறது. மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்பானவர்களே!

அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, 'இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி.

எம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கின்ற இந்தச் சர்வதேசச் சதி வலை எவ்வாறு படிப்படியாக [systematically] பின்னப்பட்டது என்பதையும், நாம் எப்படி அதற்குள் சிக்கிக்கொண்டோம்; என்பதையும் தெளிவாக விளங்கிக்கொள்வதே எம் முதற் கடமை.

அந்தச் சதி வலையின் ஒவ்வொரு முடிச்சுக்களும் - ஒவ்வொரு நகர்வுகளாய் - எம்மைச் சுற்றி எப்படிப் போடப்பட்டன என்பதை விளங்கிக்கொண்டால் தான், அவற்றை அவிழ்த்துச் செல்வது எப்படி என்பது பற்றியும் நாம் சிந்திக்க முடியும்.

பெரும் இராணுவ சாதனையைப் படைத்து புலிகள் முன்னேறினாலும், அல்லது நிலைமை மேலும் சிக்கலாகி அவர்கள் பின்னடைந்தாலும் -

இதுவரை என்ன நடந்தது என்பதை உற்று நோக்குவது, இனிமேல் நாம் செயற்படும் போது என்ன முட்டுக்கட்டைகள் எம் வழியில் போடப்படும் என்பதை நாம் விளங்கவும் அவற்றை மேவிக்கடந்து முன்னே செல்வது எப்படி என்பது பற்றிச் சிந்திக்கவும் உதவும்.

நிகழ்வு:
தமிழர்களுக்கு எதிரான இந்தச் சதிவலையை இந்தியாவும், மீதி உலகமும் [rest of the world] இரண்டு முனைகளினூடாகப் பின்னுகின்றன.

முதலாவது - தமிழீழப் போர்க்களம். அது நேரடியான இராணுவப் படையெடுப்பு.

அடுத்தது - பன்னாட்டுப் போர்க்களம். அது இராஜதந்திர அரசியல் கபட நகர்வுகள்.

முதலாவது - பல கற்களை வீசியாவது ஒரே காயை வீழ்த்தும் நோக்கம்: இலக்கு விடுதலைப் புலிகள் இயக்கம்.

அடுத்தது - ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் எண்ணம்: இலக்கு பன்னாட்டுத் தமிழ் சமூகம்.

முதலாவதின் நோக்கம் - புலிகள் இயக்கத்தின் மரபு வழிப் போர்த் திறனை அழித்து, பின்னர் அதனை அரசியல் ரீதியாகவும் ஒதுக்கி - தமிழர்களை நேர்த்தியான அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக்கிச் சிதைப்பது.

அடுத்ததின் நோக்கம் - வெளிநாட்டுத் தமிழர்களைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்து, அரசியல் சக்தியற்றவர்களாக்கி, பின்னர் தமிழர்களது தேசியத் தன்மையையே சிதைப்பது.

இந்தப் போரில் பல பங்காளிகள் இருக்கின்றார்கள்: முதன்மைப் பங்காளி - இந்தியா@ முக்கிய பங்காளி - மேற்குலகம்@ உப-பங்காளி - மீதமுள்ள உலகம்.

இந்த இரண்டு போர்க் களங்களுமே அவற்றிற்குள் பல உப-முனைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு முனையும் ஒவ்வொரு உடனடி இலக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது.

நோக்கம்:

இந்த இரண்டு போர்க் களங்களையும் சேர்ந்த ஒட்டுமொத்தமான போரின் இறுதி இலக்கு - தமிழ் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைச் சிதைத்து, தமிழீழக் கோரிக்கையை அடிப்படை அற்றது ஆக்குவதாகும்.

ஆனால் ஏன் இப்படி எல்லோரும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான போரை நடாத்துகின்றார்கள்?...

இந்தியா ஒரு காரணத்திற்காக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வேறொரு காரணத்திற்காக, மேற்குலகிற்கு எதிரான கிழக்குலகம் இன்னொரு காரணத்திற்காக, இஸ்லாமிய உலகம் வேறொரு காரணத்திற்காக நடாத்துகின்றார்கள்.

ஆனால் - சுருக்கமாக - எல்லோரும் சேர்ந்து, தம் சொந்த கேந்திர அரசியல் நலன்களிற்காக - சிங்கள இனத்தைப் பகடைக் காய்களாகப் பாவித்து, தமிழினத்திற்கு எதிராகப் படை எடுக்கின்றார்கள்.

இந்தப் போரை நடாத்துகின்றவர்கள் மிகத் தெளிவாக ஒழுங்கமைத்து - நன்கு திட்டமிட்ட வழிமுறைகளினூடாக - படிப்படியாக, நிதானமாக அதைச் செய்கின்றார்கள்.

அதனால் - இந்தப் போருக்கு உட்பட்டு இருக்கின்ற தமிழர்களாகிய நாங்கள் இந்தச் சர்வதேசச் சதியின் பரிமாணங்களைப் போதிய ஆழத்திற்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

இதுவரை காய்கள் எப்படி நகர்த்தப்பட்டன, இப்போது எப்படி நகர்த்தப்படுகின்றன என்பதை மிகவும் நுணுக்கமாகவும், நெருக்கமாகவும் நோக்கி நாம் ஆராய வேண்டும்.

அப்போது தான் - இனிமேல் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியும்.

நகர்வு - 1:

2001 இன் சூழலைப் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனையிறவை வீழ்த்தி, புலிகள் முகமாலை வரை முன்னேறியதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது.

போர்க் களத்தில் விடுதலைப் புலிகளின் கை என்றுமில்லாத அளவிற்கு ஓங்கியிருந்தது இந்தியாவிற்குப் பிடிக்கவில்லை@ பொருளாதாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் கை என்றுமில்லாத அளவிற்குத் தாழ்ந்திருந்தது மேற்குலகத்திற்கு விருப்பமில்லை.

புலிகளின் போர் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தவும் அப்போது அவர்களுக்கு இருந்த ஒரே உடனடி வழி - சண்டையை நிறுத்த வைத்துப் புலிகளைப் பேச்சு மேசைக்கு இழுத்து வருவது தான்.

2002 இல் - இந்தியாவின் மனம் நிறைந்த ஆசீர்வாதத்துடனும், மேற்குலகத்தின் ஏகோபித்த ஆதரவுடனும் சமரச முயற்சிகள் ஆரம்பமாகின. அனுசரணையாளர் ஆகியது நோர்வே@ இணைத் தலைமை நாடுகள் என அதனுடன் கூடிக் கொண்டன அமெரிக்காவும், யூரோப்பின் யூனியனும், ஜப்பானும்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையில் எழுதப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையானது - எல்லைகளை வரையறுத்து, பிரதேசங்களை அங்கீகரித்து - விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த பொது முகாமைத்துவக் கட்டமைப்பினை ஒரு நடைமுறை அரசாங்கமாகவே [De-facto State] அங்கீகரித்தது.

இந்த வரலாற்றுப் புரிந்துணர்வு உடன்படிக்கையை வரைந்துருவாக்கிய பெருமை பாலா அண்ணையையே சேரும். இருந்தாலும், அவரது எண்ணங்களுக்கு இடமளித்து - கடல் தொடர்பான விவகாரங்கள்; தவிர வேறு எதற்கும் முட்டுக்கட்டைகள் போடாமல் - உடன்படிக்கை கையெழுத்தாவதற்கு அனுசரணைகள் செய்தது மேற்குலகம்.

அதற்கு ஒரு மௌனப் புன்னகையோடு ஒப்புதல் கொடுத்தது இந்தியா.

போர்ச் செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்திவிட்டு தமிழ் தேசியப் போராட்டத்திற்கு சமரச வழியில் அரசியல் தீர்வு காணும் முயற்சிகளில் இறங்கினர் விடுதலைப் புலிகள்.

மேற்குலகும், இந்தியாவும் நியாயத்துடன் செயற்படுவர் என்று நம்பினர் தமிழ் மக்கள்.

நகர்வு - 2:

ஆனால் - இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படும் வரை நல்லவர்களாக நடித்து, ஆசீர்வாதங்கள் வழங்கி, அனுசரணைகள் செய்த இந்தியாவும், மீதி உலகமும், அது நடைமுறைக்கு வந்த பின்னர் தமது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தன.

ஓன்றன் பின் ஒன்றாக - தமிழர்களுக்குப் பாதகமான விடயங்கள் அரங்கேற்றப்பட்டன. சிலவற்றை சிறிலங்கா அரசும், சிலவற்றை மீதி-உலகமும், சிலவற்றை இருதரப்பும் சேர்ந்தும் அரங்கேற்றினர்.

1) போர் நிறுத்த உடன்படிக்கையில் ஒப்புக்கொண்டபடி, சிறிலங்கா அரசு -

உயர்-பாதுகாப்பு வலயங்களை நீக்கவில்லை.
பாடசாலைகளிலும், வீடுகளிலும், கோவில்களிலும் குடியிருந்த தமது படையினரை அகற்றவில்லை.
போரினால் இடம்பெயர்ந்து அல்லற்பட்ட மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கவில்லை.
மீள்-கட்டுமான மற்றும் புனர்-வாழ்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட உப-குழுக்கள் செயற்பட இடமளிக்கவில்லை.
அந்த உப-குழுக்களால் கண்டறியப்பட்ட 75 வரையான வேலைத்திட்டங்களில் எதனையும் செய்ய உடன்படவில்லை.
2) விடுதலைப் புலிகளின் கடற்-கலங்கள் பல தடவைகள் தாக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டனர்.

3) இவ்வளவும் நடந்துகொண்டிருந்த போது - நோர்வேயோ அல்லது இணைத் தலைமை நாடுகளோ, உடன்பட்ட விடயங்களைச் செய்து முடிக்கும் படி சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்கள் போடவில்லை.

எல்லாவற்றிற்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.

இந்த நேரத்தில் -

உடன்படிக்கையிலும், அதுவரை நடந்து முடிந்த பேச்சுக்களிலும் ஒப்புக்கொண்ட விடயங்கள் நடக்காதவரை, மீதிச் சுற்றுப் பேச்சுக்களுக்குப் போவதில் பயனேதும் இல்லை என முடிவுக்கு வந்தனர் புலிகள்.

இந்த இடத்தில் தான் - மேற்குலகம் அதிர்ச்சியடைந்தது.

சண்டை நிறுத்தத்தை முறித்துக்கொண்டு, புலிகள் மீண்டும் போருக்குப் போய் விடுவார்களோ என்று அது திகைப்புற்றது. புலிகள் திரும்பவும் போருக்குப் போனால், 2001 ஆம் ஆண்டின் கள நிலவரங்கள் தொடர்ந்தால், போர் வலுச் சமநிலையில் புலிகளின் கை இன்னும் ஓங்கினால், சிறிலங்காவின் 'சீர்நிலை" [stability] குலைக்கப்பட்டால், அதன் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியுற்றால்... விளைவு என்னவாகிவிடுமோ என்று கவலையுற்றது மேற்குலகம்.

தமிழ் தேசியம் மீண்டும் பேரெழுச்சி பெற்றுவிடுமோ என்று அச்சமுற்றது இந்தியா.

ஆனால் - புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செவ்வனே நடைமுறைப்படுத்தி, சொன்னவற்றைச் செய்யுமாறு சிறிலங்கா அரசின் மேல் அழுத்தங்களைப்; போடுவதற்குப் பதிலாக -

எது நடந்தாலும் அந்த உடன்படிக்கையில் இருந்து விலகாமல் இருக்கப் புலிகள் மீது மட்டும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வழிமுறையை இந்த உலகம் கையாண்டது.

அதை அது படிப்படியாகச் செய்தது.

நகர்வு - 3:

முதற் படியாக - அடிப்படையாக - தடைசெய்யப்பட்ட ஒர் அமைப்பாகப் புலிகள் இயக்கத்தின் மீது அனைத்துலக ரீதியாக சட்டங்களைக் கொண்டு வந்தது இந்த உலகம்.

இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்படுவதற்கு முன்னர் இரண்டு நாடுகள் மட்டுமே புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" என்ற வரைமுறைக்குள் அடக்கியிருந்தன.

ஒன்று - இந்தியா@ அடுத்தது - அமெரிக்கா.

இப்போது -

அரசியல் சமரச முயற்சிகளில் புலிகள் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, அவர்களை ஒரு 'பயங்கரவாத" இயக்கமாக ஏனைய மேற்கு நாடுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன.

பிரிட்டன், யூரோப்பியன் யூனியன், கனடா, ஓஸ்ரேலியா என ஒவ்வொரு நாடுகளாக, மேற்குலகம் புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கியது.

போரை நிறுத்திவிட்டு, தமிழரது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு இயக்கத்தைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு நியாயமான எந்த ஒரு காரணமும் இந்த நாடுகளுக்கு இருக்கவில்லை. ஆனாலும், அவை அதைச் செய்தன.

தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - தமது நலன்களுக்கு எதிராக என்றும் செயற்படாத - ஒர் அமைப்பைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு எந்தத் தேவையும் இந்த நாடுகளுக்கு இல்லை. ஆனாலும், அவை அதைச் செய்தன.

எல்லாவற்றுக்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.

புலிகள் இயக்கம் மீதான இந்தத் தடை ஒரு Cluster-குண்டு போன்றது. ஒரே பெரிய குண்டு பலவாகப் பரிந்து பல முனைகளில் தாக்குவதைப் போல, பல்பரிமாண நோக்கம் கொண்டது.

நகர்வு - 4:

இந்தத் தொடர் தடைகளின் தொடர்ச்சியாக -

'புரிந்துணர்வு உடன்படிக்கை"யின் ஒரு தரப்பை 'அரசாங்க"மாகவும், அடுத்த தரப்பைப் 'பயங்கரவாதிக"ளாகவும் தரம் பிரித்து நடாத்த ஆரம்பித்தது உலகு.

'யுத்த நிறுத்தம்" நடைமுறையில் இருந்த போதே கொண்டுவரப்பட்ட இந்தப் 'பயங்கரவாத"ப் பட்டியலிடுதல்களின் உடனடி நோக்கம் -

சமரச முயற்சியிலேயே ஈடுபட்டிருங்கள் என புலிகள் இயக்கத்தை அழுத்துவது.
பேச்சு மேசையில் கிடைப்பதை வாங்குங்கள் எனப் புலிகளை நிர்ப்பந்தம் செய்வது.
சிறிலங்கா அரசு உடன்பாட்டின்படி செய்யாது விடினும் சமரச முயற்சியிலிருந்து விலகாமலிருக்கப் புலிகளை எச்சரிக்கை செய்வது.
சமரச முயற்சிகளிலிருந்து விலகினால் எதிர்காலம் எல்லா வகையிலும் கடுமையானதாக அமையும் எனப் புலிகள் இயக்கத்தைப் பயமுறுத்தல் செய்வது.
அதே நேரத்தில் -

இந்தப் 'பயங்கரவாத'ப் பெயர் சூட்டல்களின் பின்னாலிருந்த நீண்டகால உள்நோக்கம் -

மேற்சொல்லப்பட்ட எல்லாவற்றையும் மீறிப் புலிகள் புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகினாலோ, அல்லது சிறிலங்கா அரசாங்கமே போரை ஆரம்பித்தாலோ -

ஒன்று - உள்நாட்டில் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடாத்தும் சிறிலங்கா அரசுக்கு அனைத்து போர்-தொடர்புபட்ட உதவிகளையும் செய்வது.

இரண்டு - அனைத்துலக ரீதியாக, தத்;தமது நாடுகளிலிருக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், வெளிநாட்டுத் தமிழர்களிடமிருந்து புலிகளுக்கு எவ்வித உதவிகளும் போகாமல் தடுப்பது.

மூன்றாவதும், முக்கியமானதும் - வெளிநாட்டுத் தமிழர்கள் மீது அழுத்தங்கள் போட்டும், உள்நாட்டுத் தமிழர்கள் மீது செல்வாக்குச் செலுத்தியும் - அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிப்பது.

நகர்வு - 5:

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானது, இரண்டு தரப்பையும் சம பங்காளிகளாக்கி, படைவலுச் சமநிலையைப் பேணுவதற்கு இரு தரப்பிற்கும் இடமளித்திருந்தது.

ஆனால் - புலிகள் இயக்கம்; தமது படை பலத்தைப் பேணுவதற்கு எல்லாவகையான முட்டுக்கட்டைகளையும், எல்லா வழிகளிலும் போட்டுக்கொண்டு, மறு புறத்தில் -

சிறிலங்காவின் பொருளாதாரத்தையும், அதன் இராணுவ இயந்திரத்தையும் முழுமையாகப் பலப்படுத்தும் காரியங்களை இந்தியாவும், மீதி உலகமும் மும்முரமாகச் செய்தன.

அதாவது - ஒரு பக்கத்தில், சீர்குலைந்து போயிருந்த சிறிலங்காவின் படைத்துறை, சமரச முயற்சிகள் ஆரம்பித்து மூன்று வருடங்களிலேயே முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டுவிட, மறு பக்கத்தில், புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்ச்சியாகத் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.

போர்க் களம்:

முன்னரே போரை எதிர்பார்த்து - அதற்கு முன்னேற்பாடாக இவ்வளவு நகர்வுகளும் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, மிகத் துல்லியமாகச் செயலாக்கப்பட்ட பின்பு -

உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக - இரண்டு போர்;க் களங்களைத் தமிழர்களுக்கு எதிராகத் திறந்தன சிறிலங்காவும், மீதி உலகமும்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பின்னர் - நல்ல தருணம் பார்த்துக் காத்திருந்த பின்னர் - ஓரளவுக்கு நேரடியான தலையீட்டை ஆரம்பித்தது இந்தியா.

பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கும், அதன் அணு குண்டுக்கும் பயந்ததைவிட, பிரபாகரனின் மனவுறுதிக்கும், அவரது தலைமையில் எழுச்சிகொண்ட தமிழ் தேசியத்திற்கும் பயந்தது இந்தியா.

இதுவரையும் மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகளுக்கு - பின்னாலே இருந்து ஆசிகள் தந்த இந்தியா, இப்போது - மெல்ல மெல்ல - தானே தலைமை ஆட்டக்காரன் ஆகியது.

பூதாகரமாய் உருவெடுத்த சைனாவை எதிர்கொள்ள வழி தேடிய மேற்குலகம், இன்னொரு பூதமாய் வளர்ந்த இந்தியாவோடு - வேறு வழியின்றித் - தோள் சேர்ந்தது.

தமிழர்களுக்கு எதிரான போர்க் களங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் திறக்கப்பட்ட போது, தென்னாசியாவில், இந்தியாவின் விருப்பமே மேற்குலகின் விருப்பம் ஆனது.

முதலாவது களம்:

தமிழீழப் போர்க் களம். அதன் அகன்ற பரிமாணங்கள் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அது நேரடி யுத்தம். மிக வெளிப்படையானது. முழுமையாக இராணுவ மயப்பட்டது. புலிகளின் மரபுவழிப் போர்வலுவை நிர்மூலம் செய்து, அவர்களது அரசியல் சக்தியையும் அழிக்கும் இலக்கைக் கொண்டது. மறைமுகக் காரணிகள் என பெரிதாக எதுவும் அற்றது.

புலிகளைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கிவிட்டு, 'பயங்கரவாதத்திற்கு எதிரான" போர் என்ற பெயரில் - உலகமே பின்னாலே திரண்டு சிறிலங்கா படைகளை முன்னாலே தள்ளுகின்றது.

பணத்தை வழங்கி, ஆயுதங்களை வழங்கி, போரியல் ஆலோசனைகளை வழங்கி, போர்க் கருவிகளையும் அவற்றை இயக்குவதற்கு ஆட்களையும் வழங்கி, வானூர்தி ஒட்டிகளை வழங்கி, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய உளவுத் தகவல்களை வழங்கி, வெளிநாட்டுத் தமிழர்கள் மீது சட்ட அழுத்தங்களைப் போட்டு - எல்லோருமாகப் பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றனர்.

அந்த நேரடிப் போர்க் களத்தைப் புலிகள் தான் வெல்ல வேண்டும். ஆனால், அந்தக் களத்தில் அவர்கள் வெல்லுவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் எம்மாலான எல்லா வழிகளிலும் நாம் தான் செய்ய வேண்டும். அதனைத் தவிர, அதன் ஆழமான போரியல் விபரங்களில் நாம் கவனம் செலுத்துவதற்குப் பெரிதாக எதுவும் இல்லை.

அடுத்த களம்:

அனைத்துலகப் போர்க் களம். தமிழீழத்திற்கு வெளியே திறக்கப்பட்டிருக்கும் இந்தக் களத்தைத் தான் நாம் ஆழமாக - அலகு அலகாகப் பிரித்து - உற்று நோக்க வேண்டும்.

ஏனெனில் - இது தான் நமக்கான களம். நாம் போராட வேண்டிய களம். நாமே வெல்ல வேண்டிய களம். புலிகளை நம்பியிருக்கத் தேவையில்லாத களம்.

எமது தேசிய சுய நிர்ணய உரிமைக்கு ஜயேவழையெட [National Self-Determination] ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் [International Recognition] பெறுவதும், எமக்கெனத் தமிழீழத் தனியரசை அமைப்பதுமே எமது அரசியல் இலட்சியம்.

அN;த இலட்சியத்தை அடைவதற்காகவே விடுதலைப் புலிகள் இயக்கமும், எமது சார்பில், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

தமிழர்கள் தமது தனியரசுக் கோரிக்கையை சர்வதேச அளவில் முன்னெடுப்பதற்கு முட்டுக்கட்டைகள் போடுவதற்கு நேரடியான எந்த வழியும் இல்லாத நிலையில், இந்த உலகு வேறு மார்க்கத்தைத் தேடியது.

அது கண்டுபிடித்த ஒரு வழி தான் - புலிகள் இயக்கத்தின் மீது உலகெங்கும் கொண்டுவரப்பட்ட அந்த Cluster-குண்டு பாணியிலான தடை. அந்த தடையின் ஒர் இலக்கு - தமிழர்களால் உலகெங்கும் முன்னெடுக்கப்படும் 'தமிழீழம்" என்ற கோட்பாடு.

அதே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளைப் 'பயங்கரவாத" இயக்கம் ஆக்கியதன் மூலமாக -

தனியரசைக் கோருவதும், சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும் - அவை நியாயபூர்வமான அபிலாசைகளாக [Legitimate Aspirations] இருந்தாலும் - அதே கோட்பாடுகளை ஒரு 'பயங்கரவாத" இயக்கமும் முன்வைப்பதால் -

அந்தக் கோட்பாடுகளை முன்னெடுப்பதே ஒரு பயங்கரவாத இயக்கத்தின் கருத்தை முன்வைப்பது போன்றதாகும் எனும் விதமான ஒர் அச்சச் சூழலை வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் இந்த உலகு உருவாக்கியது.

அந்த வகையில் - தமிழீழத்தைக் கோருவதும், சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும்;, இந்த உலகம் ஏற்றுக்கொள்ள மாட்டாத ஒரு கோட்பாடு என்ற ஒரு கருத்தையும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கி, அதனை நிராகரித்தது.

இதன் மூலமாக - தமிழீழம் பற்றிப் பேசினாலே 'பயங்கரவாத"ப் பட்டம் சூட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தையும், அந்தப் பட்டம் சூட்டப்பட்டுவிட்டால் வேறு கருத்துக்கள் கூட சொல்ல முடியாமல் நாம் நிராகரிக்கப்பட்டுவிடுவோம் என்ற தயக்கத்தையும் தமது நாட்டுப் பிரஜைகளாக உள்ள தமிழர்கள் மத்தியிலேயே உருவாக்கியது.

இதன் விளைவாக - தமது சொந்த நாட்டுப் பிரஜைகளுக்கே, அவர்கள் தமது உணர்;வுகளையும், அபிலாசைகளையும் வெளிப்படுத்துவதற்கும், பேசுவதற்கும் உள்ள சுதந்திரத்திற்கு [Freedom of speech and expression] அந்தந்த நாட்டு அரசுகளே முட்டுக்கட்டைகளைப் போட்டன.

இவற்றின் முடிவாக - தமிழர்களுக்காக தமிழர்களுக்குள் நடாத்தப்படும் கூட்டங்களில் தமிழீழம் பற்றியும், புலிகள் இயக்கம் பற்றியும் வானுயரப் புகழும் நாங்கள், அதை உண்மையிலேயே சொல்ல வேண்டிய எங்களது நாட்டு அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்களில், எதுவும் சொல்ல முடியாதவர்களாய் வாயடைக்கப்பட்டோம்.

இவ்வாறான சூழலில் தான் - தமிழீழம் பற்றிப் பேசினால் தமது பேச்ச எடுபடாது என்ற முடிவுக்கு வந்த எமது வெளிநாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்கள் தத்தமது நாட்டு அரசுகளை அணுகுவதற்குப் புதிய ஒரு தந்திரோபாயத்தைக் கையிலெடுத்தார்கள்.

அது என்னவெனில் - எமக்குத் தேவையானதாக இருந்தாலும், மேற்குலகத்திற்குப் பிடிக்காத விடயங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, எமக்கு முக்கியமற்றதாக இருந்தாலும் மேற்குலகத்திற்குப் பிடித்த விடயங்களை மட்டுமே மேற்குலகத்துடன் பேசுவது.

அதாவது - தமிழ் தேசிய இனப் போராட்டத்தின் நிரந்தர முடிவுக்கான எமது அடிப்படை அரசியல் இலட்சியம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, அந்தப் போராட்டத்தின் வழியில் நாம் சந்திக்கும் துன்பங்களைப் பற்றிய தற்காலிக மனிதாபிமானப் பிரச்சனைகளை [Humanitarian Crisis] பற்றி மட்டும் பேசுவது.

இந்த இடத்தில் தான் -

தனது ஆறு ஆண்டுகாலம் நீண்ட - பொறுமையான - நுட்பம் மிகுந்த - நகர்வுகளினதும், நடவடிக்கைகளினதும் துல்லியமான வெற்றியை மேற்குலகம் பெற்றது.

மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு உதவி வேண்டி நாம் அதன் காலடியில் விழ வேண்டும் என அது காத்திருந்தது. அப்படி விழுந்து - நாங்கள் அவற்றைச் சார்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தது. அப்படிச் சார்ந்திருந்து - அது சொல்வதையே கேட்கும் ஒரு நிர்ப்பந்த சூழலுக்குள் எம்மைச் சிக்க வைக்க அது விரும்பியிருந்தது.

அப்படியாக - மனிதாபிமானப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசும் முடிவை நாம் எடுத்த போது, தனது விருப்பத்தில் வெற்றி கண்ட மேற்குலகு, எம் மீது ஒரு மாய வலையை விரித்தது.

எமது கஸ்டங்களைச் சொல்லி நாம் அழும் போது அக்கறையோடு கேட்பது போல நாடகமாடியது. தனக்கு ஏற்கெனவே தெரிந்த விடயங்களையே - நாம் சொல்லும் போது - ஏதோ புதிதாகக் கேட்பது போலப் பாசாங்கு செய்தது.

நாமும் - 'மேற்குலகிற்குப் பிடித்த விடயங்களைப் பேசும் போது அது அக்கறையோடு கேட்கின்றதே" என்று, அதற்குத் தெரிந்த விடயங்களையே பேசிப் பேசி, கடைசியில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைச் சொல்லுவதை விடுத்துவிட்டு, மேற்குலகத்திற்கு என்ன பிடித்ததோ அதை மட்டுமே பேசப் பழகிக்கொண்டோம்.

இப்பொழுது -

முப்பது ஆண்டு காலம் போராடியதன் பின்பு, நூறாயிரம் மக்களை உயிர்ப்பலி கொடுத்த பின்பு, இருபத்தி மூவாயிரம் பேராளிகளது கல்லறையின் மேல் நின்று கொண்டு -

'தமிழீழத் தனியரசு" பற்றிப் பேசுவதை நாங்கள் தவிர்க்கின்றோம். தமிழரின் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுவதற்கு நாங்கள் தயங்குகின்றோம். 'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே எமது ஏக அரசியல் பிரதிநிதிகள்" என்று வெளிப்படையாகச் சொல்லுவதற்குப் பின்னடிக்கின்றோம்.

சொல்லப்பட வேண்டிய இவற்றைச் சொல்லி, எமக்கான அங்கீகாரத்தைத் தலைநிமிர்ந்து கோருவதைத் தவிர்த்துவிட்டு - உணவும், உடையும், மருந்தும், போர் நிறுத்தமும் வேண்டி - பிச்சைக்காரர்கள் போல - உலகத்தின் முற்றத்தில் கையேந்தி நிற்கின்றோம்.

வன்னித் தமிழர்கள் அழிகின்றார்கள், கிழக்குத் தமிழர்கள் படுகொலையாகின்றார்கள், வடக்குத் தமிழர்கள் கடத்தப்படுகின்றார்கள், கொழும்புத் தமிழர்கள் காணாமல் போகின்றார்கள், மலையகத் தமிழர்கள் கைதாகின்றார்கள் என்று உலகத் தமிழர்கள் நாம் புலம்பி அழுகின்றோம்.

இந்த உலகத்திற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் எங்கள் துயரங்களைத் திரும்பவும் சொல்லுவதற்காக - ஊர்வலங்கள் வைத்து, மட்டைகள் பிடித்து, கோசங்கள் எழுப்பி, கடிதங்கள் எழுதி, மனுக்கள் அனுப்பி - எம்மையே நாம் ஏமாற்றுகின்றோம்.

போராட்டத்துக்கு அடிப்படையான 'தமிழீழம்" என்ற தீர்வை வலியுறுத்துவதை விட்டுவிட்டு, போரை நிறுத்தும்படி மன்றாடுகின்றோம்.

பிரபாகரனும் அவருடைய போர் வீரர்களும் தலை குனியாது நிகழ்த்தும் கம்பீர யுத்தத்தின் தார்ப்பரியங்களை நாம் கேவலப்படுத்துகின்றோம்.

ஆனால் - இந்த நாளுக்காகத்தான் இந்த உலகமும், இந்தியாவும் காத்திருந்தன, தமது கடைசி நகர்வை மேற்கொள்வதற்காக.

அந்தக் கடைசி நகர்வு தான் - புலிகள் இயக்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட அந்த ஊடரளவநச-குண்டு பாணியிலான உலகத்-தடையின் கடைசி இலக்கு.

அது - வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைப் புலிகளிடமிருந்து பிரிப்பது@ உள்நாட்டில் வாழும் தமிழர்களின் மீது போலித் தீர்வு ஒன்றைத் திணிப்பது.

ஒரு புறம் - மனிதாபிமானப் பிரச்சனைகளைச் சொல்லித் தம்மைத் தேடி வந்த வெளிநாட்டுத் தமிழர்களை, மானிட நேய முகத்தைக் காட்டி மயக்கியது இந்த உலகம்.

மறு புறம் - 'ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என்று பொங்கியெழுந்த தமிழகத் தமிழர்களை, 'இதோ முகர்ஜியை அனுப்புகின்றோம், மேனன் போயிருக்கின்றார்" என்று கூறியே அடக்கியது இந்தியா.

இப்போது -

தமிழர்களின் அவலங்களைத் தீர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு மேற்குலகும், அவர்களை அழிவிலிருந்து காப்பதாகக் கூறிக்கொண்டு இந்தியாவும் காலத்தை இழுத்தடிக்கின்றன.

கிளிநொச்சியின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து, ஆனையிறவின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து - இப்போது, முல்லைத்தீவினதும், புதுக்குடியிருப்பினதும் வீழ்ச்சிக்காய் காத்திருக்கின்றன.

முப்படைகளையும், நெடுந்தூரப் பீரங்கிகளையும் வைத்திருக்கும் புலிகளின் மரபுவழிப் போர்வலுவை உடைத்து, மீண்டும் அவர்களை ஒரு கெரில்லாப் படையாக காட்டிற்குள் பதுங்க வைக்கும் நம்பிக்கையோடு, சிறிலங்காவுக்கு காலத்தை எடுத்துக் கொடுக்கின்றன.

அதே நேரத்தில் - இன்னொரு பக்கத்தில் - விடுதலைப் புலிகளோடு; இருக்கும் வரை தமிழர்களது துன்பங்கள் எதுவும் நீங்கப் போவதில்லை என்ற சமிக்ஞையை கொடுத்து -

'புலிகள் அழிந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் பிரச்சனைக்கு நாங்கள் நல்ல தீர்வைப் பெற்றுத் தருகின்றோம், நீங்கள் புலிகளை விட்டு விலகுங்கள்" என்று தமிழர்களுக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன.

இந்த அணுகுமுறையோடு -

முதலாவது, அது சரிவராமல் போனால் அடுத்தது என இரண்டு நோக்கங்களோடு இந்தியாவும் இந்த உலகமும் செயற்படுகின்றன:

புலிகளிடமிருந்து தமிழர்களையும், தமிழர்களிடமிருந்து புலிகளையும் பிரித்து, விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் செல்வதைத் தடுப்பது. உதவிகள் போகாமல் நிர்க்கதியாகி நிற்கும் புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பது. புலிகள் அழிந்த பின் - கேட்பதற்கு யாருமற்ற நிலையில் தமிழர்கள் இருக்கும் போது, பிச்சை போல, தீர்வே இல்லாத ஒரு தீர்வை அவர்கள் மீது திணிப்பது.

வெளிநாட்டுத் தமிழர்களது நிதியுதவியில் தான் புலிகள் இயக்கம் தங்கியிருக்கின்றது என்பதால், வெளிநாட்டுத் தமிழர்களைக் கபடமாய்க் கவர்ந்து, அவர்கள் மூலமாக புலிகள் இயக்கத்தின் மீது அழுத்தங்களைப் போடுவது. அந்த அழுத்தத்தின் மூலமாக – விடுதலைப் புலிகளைத் தமது வழிக்குக் கொண்டு வந்து, பிச்சை போல, தீர்வே இல்லாத ஒரு தீர்வை ஏற்க வைப்பது.
இந்த இரண்டு நோக்கங்களில், ஏதாவது ஒன்றை அடையும் எண்ணத்தோடு தான் இந்தியாவும், இந்த உலகமும் இப்போது செயற்படுகின்றன.

இப்போது -

உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்ற அந்த மிக முக்கியமான கேள்வியை எம்மைப் பார்த்தே நாம் கேட்போம்.

இந்தியாவில் காங்கிறஸ் ஆட்சி இறங்கினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ, அமெரிக்காவில் ஒபாமாவின் ஆட்சி ஏறினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ எமக்கு இப்போது நேரம் இல்லை.

விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிக்காகக் காத்திருக்கவும் எமக்கு இனி நேரம் இல்லை.

போராட்டத்தை உடனடியாக நாமே கையில் எடுப்போம்.

சரியான நகர்வுகளை நாம் தெளிவாக மேற்கொண்டால், புலிகளி;ன் போர் வெற்றிக்கே நாம் வழியமைக்கலாம்.

அல்லது - நாம் காத்திருப்பதைப்போல, புலிகள் இயக்கம் ஒரு மாபெரும் இராணுவ வெற்றியைச் சாதித்தால், அதற்கெதிராக இந்த உலகமும், இந்தியாவும் முன்னரைப் போல குறுக்கே வர முடியாத ஒரு சூழலை உருவாக்கலாம்.

எப்படி?

எம் முன்னால் இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று உடனடியாகச் செய்யப்பட வேண்டியது. அடுத்தது, மிக உடனடியாகச் செய்யப்பட வேண்டியது.

உடனடியாகச் செய்யப்பட வேண்டியவை என்ன என்ன என்பதை நீங்களும் சிந்தித்து எமக்கு எழுதுங்கள், நானும் சிந்திக்கின்றேன்.

அவற்றைச் சிந்திக்கின்ற அதே வேளையில், பெரிதாகச் சிந்தனை எதுவும் தேவைப்படாத - மிக உடனடியாகச் செய்;யப்பட வேண்டிய பணியை இப்போதே சொல்லிவிடுகின்றேன்.

சுருக்கமாகச் செல்வதானால் - உலகெங்கும் இருக்கும் இந்தியத் தூதுவரகங்களைத் தமிழர்கள் உடனடியாக 'முற்றுகை" இட வேண்டும்.

இங்கே நான் 'முற்றுகை" என்று குறிப்பிடுவது மனிதர்கள் கூடி வளைப்பதை மட்டுமல்ல. எம் எண்ணங்களால், கருத்துக்களால், ஆக்கபூர்வமான செயல்களால் முற்றுகை இட வேண்டும்.

எமது பிரச்சனையில் இந்தியாவே இப்போது முதன்மையானதும் முக்கியமானதுமான ஆட்டக்காரர்: தமிழர் போராட்டத்தை இந்தியா எதிர்த்தால், முழு மேற்குலகமும் எதிர்க்கும். இந்தியா அங்கீகரித்தால், முழு மேற்குலகமும் ஆதரிக்கும்.

தென்னாசியாவில் இன்று இந்தியாவே எல்லாம்;: இந்தியாவை மீறி இந்து சமுத்திரத்தின் அலை கூட அசையப் போவதில்லை.

பாகிஸ்தானோடு பரவசப்பட்டு, சைனாவோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு, தனது நாட்டின் ஏழு கோடி மக்களினது விருப்பமின்மையையும் மீறி இந்தியா உதவி செய்வது இரண்டு காரணங்களுக்காக -

ஒன்று - 'எங்கள் நாட்டுப் பிரதமரைக் கொன்றவர்களை நாம் சும்மாவிடுவதா?" என்ற அர்த்தமற்ற வரட்டுக் கௌரவம்.

அடுத்தது - தமிழீழத் தனிநாடு தென்னிந்தியாவில் தனியரசுக் கிளர்ச்சிகளை உருவாக்கும் என்ற அடிப்படையற்ற பயம்.

தனது தென் கோடியில் ஒரு பெரும் காப்பரனாகவும், என்றும் தளம்பல் அற்ற ஒரு வரலாற்று நண்பனாகவும் இருக்கக்கூடிய ஒரு மக்கள் இனத்தை அழிக்க இந்தியா முன்னின்று உதவுவதற்கு வேறு எந்த உருப்படியான காரணமும் இல்லை.

செய்தி:

முக்கியமான மூன்றே மூன்று விடயங்களை இந்தியாவிடம் நாம் - மீண்டும் மீண்டும் - எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும்.

அந்த மூன்று விடயங்களையும் செய்யுமாறு - கடுமையான அழுத்தங்களைத் தொடர்ச்சியாகப் பிரயோகிக்க வேண்டும்.

தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்து, தனியரசு உருவாக உதவுங்கள்.
அது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கும் நிபந்தனையற்ற உத்தரவாதம்.

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள்:
வேறு எவரையும் எம் பிரதிநிதிகளாக நாம் எற்றுக்கொள்ள மாட்டோம்.
இந்திய தேசிய நலன்களுக்கு எதிராகப் புலிகள் எப்போதும் செயற்படவில்லை.
புலிகள் மீதான தடையை நீக்கி இராஜதந்திரத் தொடர்புகளை எற்படுத்துங்கள்.

சிறிலங்காவுக்கான அனைத்து போர்-சார் உதவிகளையும் உடன் நிறுத்துங்கள்.
அது உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை.
செயல் - 1:

உலகிலுள்ள ஒவ்வொரு இந்தியத் தூதுவரகத்தையும் நாம் அணுக வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள், தேர்ந்த பிரதிநிதிகள் குழக்களை [Delegation] உருவாக்கி அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களைச்; சந்தித்து இந்த மூன்று விடயங்களையும் சொல்ல வேண்டும். இன்றே இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.

ஒரு தடவையோ, இரு தடவையோ, மூன்று தடவையோ போய்விட்டு விட்டுவிடக் கூடாது. தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் செல்ல வேண்டும். அவர்கள் மீது அழுத்தங்களை இடைவிடாது போட வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாமும் ஓயப் போவதில்லை என்ற தெளிவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

தற்போதைய போரை நிறுத்துவது பற்றியும், வன்னி மக்கள் எதிர்கொண்டு நிற்கும் மனிதப் பேரவலத்தைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பெரும் இனப் படுகொலை ஆபத்தைப் பற்றியும் சொல்லுகின்ற அதே வேளையில் -

இந்த ஒவ்வொரு சந்திப்பினதும் கடைசி 40 வீதமான நேரம், இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த விடயங்களை நாம் முன்வைக்கும் போது - பல மழுப்பல் கதைகளை இந்திய தூதுவர்களும், அங்குள்ள அதிகாரிகளும் எமக்குச் சொல்லுவார்கள்.

'சோனியா காந்தி இருக்கும் வரை இவை எதையும் செய்ய முடியாது," 'அவர் பழைய கோபத்தில் இருக்கின்றார்," 'டெல்லியிலுள்ள காங்கிறஸ் தலைவர்கள் இவற்றுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்," 'பிரபாகரன் மீது எல்லோரும் கோபத்தில் இருக்கின்றார்கள்," என்ற விதமாக ஆயிரத்தெட்டுக் கதைகளை அடுக்குவார்கள்.

'பிரபாகரன் இல்லாமல் போனால் அடுத்ததாக யார் வருவினம்?," 'அடுத்த இடத்தில யார் இருக்கினம் என்று?" என்று கேள்விகள் கேட்பார்கள். ஏதோ, பிரபாகரன் இல்லாமல் போனால் தமிழருக்கு விடிவு கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை எமக்கு ஊட்டுவது போல நடிப்பார்கள்.

ஆனால், நாங்கள் திடமாகவும், ஒரே சீராகவும் இருந்து, தொடர்ச்சியாக எமது அந்த மூன்று கோரிக்கைகளையும் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டும்.

செயல் - 2:

இந்தியத் தூதுவரகங்களின் முன்னால், இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்தி பேரணிகளை தொடர்ந்து நிகழ்த்த ஆரம்பிக்க வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாள்கள் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.

ஆகக் குறைந்தது ஆயிரம் பேராவது ஒவ்வொரு தடவையும் அங்கு திரள வேண்டும். பேரணிகளின் முடிவில், தூதுவரையும், தூதுவரக அதிகாரிகளையும் வெளியில் அழைத்து எமது கோரிக்கைகளைக் கையளிக்க வேண்டும். எமது கோரிக்கைகள் நிறைவேறாது விட்டால், நாம் அடங்கிப் போக மாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும்.

ஆனால், இவையல்ல இங்கே முக்கியம்.

முக்கியமானது என்னவெனில் - பேரணிகள் ஒழுங்கு செய்வதற்கு ஒதுக்கப்படும் சக்தியின் அதே அளவு, அல்லது அதைவிட அதிகமான அளவு சக்தி வெளிநாட்டு ஊடகங்களை [Foreign Media] அந்த நிகழ்வுக்கு வரவைப்பதில் செலவிடப்படவேண்டும். நான் இங்கே தமிழ் ஊடகங்களைக் குறிப்பிடவில்லை.

பேரணிகளை வைத்துவிட்டு, சும்மா 'புதினத்"திலும், 'தமிழ்நெற்"றிலும் மட்டும் 'சங்கதி"களைப் 'பதிவு" செய்து, படங்களைப் போடுவதில் எந்தப் பலனும் இல்லை.

அந்தந்த நாடுகளிலுள்ள தமிழர்களது-அல்லாத ஊடகங்களை Non-Tamil Medias அங்கு வரவழைக்க வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளையும் அவர்களுக்கு விளக்கி - வலியுறுத்தி - அந்த ஊடகங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

பன்னாட்டு ஊடகச் செய்திகள் தான் இந்தியாவின் மீதும், இந்தியத் தூதுவர்கள் மீதும் அழுத்தங்களை அதிகரிக்கும். அதே வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தான் அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்தையும் ஈர்க்கும். ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவுக்கும், அந்தந்த நாடுகளுக்கும் ஏற்படுத்தும்.

எந்த ஒரு மாபெரும் பேரணியின் பலனும் - அதற்குப் பன்னாட்டு ஊடகங்களில் கிடைக்கும் இடத்தில் தான் தங்கியுள்ளது.

செயல் - 3:

கும்பல் கும்பலாக மின்னஞ்சல்களை ஜநு-ஆயடைஸ அனுப்புவது எந்தப் பலனையும் தராது. அவற்றைத் திறந்து பார்க்கவே மாட்டார்கள். திறக்காமலேயே 'குப்பைத் தொட்டிக்குள்" போட்டுவிடுவார்கள்.

தாள்களில் கடிதங்களை எழுதி இந்தியத் தூதுவரகங்களுக்கு இலட்சக் கணக்கில் நாம் அனுப்ப வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் தமிழ் செயற்பாட்டாள்கள் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.

சோனியா காந்தி அம்மையாருக்கும், மன்மோகன் சிங் ஐயாவுக்கும், அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களுக்கும் - சுருக்கமான ஒரு பக்கக் கடிதங்களைத் தனித்தனியாக எழுதி, உறைகளில் இட்டு இலட்சக் கணக்கில் அனுப்ப வேண்டும்.

அவ்வளவு பிரமாண்டமான தொகையில் வந்து குவியும் கடிதங்களை அவர்கள் திறந்து பார்த்தே ஆவார்கள்.

முக்கியமாக - அந்தக் கடிதங்கள் எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் உறுதியாக வலியுறுத்த வேண்டும். இந்திய அரசின் வேறு எந்த நடவடிக்கையையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டும். தமிழீழத்தின் பிறப்பே இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கக்கூடியது என்பதை ஆதரபூர்வமாக வலியுறுத்த வேண்டும்.

இந்தியாவை நோக்கி - ஒரு பக்கத்தில் - மிக உடனடியாகச் செய்ய வேண்டிய இந்த மூன்று பணிகளையும் செய்து கொண்டே, நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய வேறு பணிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நீங்களும் சிந்தித்து எழுதுங்கள்@ நானும் சிந்திக்கின்றேன்.

தி.வழுதி

மூலம் : நன்றி
தமிழ்நாதம்.