எம்மை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என பன்னாட்டு சமூகம் சொல்கிறதா? நேற்று முன்தினம் 300 பேர். நேற்று 46 பேர். (தமிழ்வின்). இன்று உலக நாடுகளிடம் இருந்து அறிக்கை வரும் என எதிர்பார்த்தோம். எதுவுமில்லை. போதாக்குறைக்கு இலங்கை வந்து போன பிரணாப் முகர்ஜி "உப்பிடி ஒரேயடியா பொசுக்காதேங்கோ, கொஞ்சம் கொஞ்சமாக செய்யுங்கோ அப்பிடி எண்டால்தான் கொஞ்சம் கதை அமரும்" எனபது போல வந்து சொல்லிவிட்டு போகிறார். வந்த மனுஷன் ஒரு கண்டன அறிக்கை கூட விடேல்ல பாருங்கோ.
என்னதான் இருந்தாலும் தமிழ் எம்.பி க்களை சும்மா சந்திச்சு, வேணாம் பார்த்திட்டு கூட போயிருக்கலாம். அதை கூட செய்யல மனுஷன். இதுக்கிடைல அவர் விடுதலைப் புலிகளை அழிச்சுப்போட்டு ஒரு அரசியல் தீர்வை முன் வையுங்கோ எண்டு கூட சொல்லிப்போட்டு போயிருக்கிறார். யாருடன் அந்த தீர்வு பற்றி கதைப்பார்கள்?. யாருக்கு அந்த தீர்வு? இனி நீங்கள் என்ன சொன்னாலும் அந்த சோனகிரி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளுவினம், எண்ட மாதிரி கதை போகுது.
சரி, தமிழகத்துல இருந்து இதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஒரு கண்டன அறிக்கை. ம்கூம். ஒரு எழுத்து, ஒரு குரல் கூட வரலை. எல்லா இணையங்கள், எல்லா வலைப்பூக்களும் அந்த அழுகுரலை, அவலக்குரலை, ஒளிப்படங்கள், எல்லாம் பிரசுரித்தும் இன்னமும் எதுவும் நடக்கவில்லை. இன்றும் கூட தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதற்கேற்ப புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் உறவுகள்தான் கண்டன போராட்டங்கள், அறிக்கைகள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என மனம் தளராமல், தளர்ச்சி என்பது இல்லாமல் தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்.தமிழகத்தை சேர்ந்த ஈழத்தமிழ் ஆதரவு அரசியல்வாதிகள் எல்லாம் சிறிது காலத்திற்கு முன்பு , ஆயுதம் ஏந்துவோம், எமது உயிரைவிடக்கூட தயாராக இருக்கிறோம், அப்பிடி இருக்கிறோம், இப்பிடி இருக்கிறோம் என எத்தனை வீர வசனங்களை முழங்கித்தள்ளினார்கள். அய்யா உங்கள் இந்த ஆதரவைத் தான் அங்கே குண்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் எம்தேசத்து உறவுகள் எதிர்பார்த்து நம்பி இருந்தனர்.
உங்கள் உயிர் வேண்டாமையா! உங்கள் ஆயுதம் தாங்கிய கரம் வேண்டாமையா!! ஒரு அறிக்கை கூடவா விட துப்பில்லை. அவ்வளவு மோசமாகி போய்விட்டோமா ஈழத்தமிழர் ஆகிய நாம்?
தமிழக அரசையோ, மத்திய அரசையோ கவிழ்க்க எந்த விதத்திலும் துணை போக மாட்டோம். ஆனால் ஈழத்தமிழருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். இது மருத்துவர் இராமதாசு அய்யாவின் நிலைப்பாடு. யோசித்து பாருங்கள் அவரின் இந்த நிலைப்பாட்டால் என்ன பலன் விளைந்தது. எதை நாம் கண்டோம். இதையே இராமதாசு அவர்கள் தன் மகனை இராஜினாமா செய்ய வைத்து, முன் மாதிரியாக இருந்தால் நாம் அவரைப் போற்றியல்லவா இருப்போம். என்ன வேண்டுமானலும் செய்ய வேண்டாமையா எங்களுக்கு. உங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள். அது போதும். ஏனய்யா பயப்படுகிறீர்கள். இன்னும் 5 மாதம் கூட இல்லாத பதவிக்காலம். இதை கூட உங்களால் விட்டுத்தர முடியவில்லை. எப்படி ஐயா உயிரைத் தரப்போகிறீர்கள். சிறிலங்கா இராணுவத்தளபதி நல்லாத்தானய்யா சொல்லி இருக்கிறான். அதுக்கு பிறகும் உங்களுக்கு சூடு வரலையே. ஆக உங்கள் ஈழத்தமிழருக்கான ஆதரவு சாப்பிட்டுவிட்டு பீடா சாப்பிடவது போலத்தான்.
அப்பாவி தமிழக மக்களின் அந்த புனிதமான உணர்வுகளை மழுங்கடிக்காதீர்கள். அவர்கள் உங்களை (தமிழக அரசியல்வாதிகள்) விட எங்களை நம்புகிறார்கள். எமக்காக எத்தனையோ செய்தார்கள். அவர்களின் அந்த புனித உறவை நாம் மதிக்கிறோம். உங்கள் அரசியல் முக்கியம் என்பதை நாம் உணருகிறோம். எமக்காக உங்களின் முழுமையான ஆதரவால் உங்கள் அரசியல் வாழ்வில் எந்த களங்கமும் ஏற்படாது. எமது ஈழத்தமிழ் மக்களுக்காகத்தான் நான் எனது பதவியை துறந்தேன் என்று நீங்கள் கூறுவீர்களேயானால் அந்த தமிழக மக்கள் நிச்சயமாக அடுத்து வரும் தேர்தலில் உங்களின் இருப்பை உறுதிப்படுத்துவார்கள். ஒரு பதவிக்காக உங்களுக்கு பத்து பதவிகள் கிடைக்கும். தமிழக மக்கள் ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் அல்லர். நீங்கள் முதலில் செய்யுங்கள். கலைஞர் சொல்வாராம். பதவி என்பது எனக்கு சால்வை. ஆனால் கொள்கை,இலட்சியம் எனது வேட்டி. ஆனால் நடவடிக்கை. மாறித்தான் இருக்கிறது. எடுக்கும் முடிவுகளை சும்மா உதறித்தள்ளிவிட்டு போகிறார். (ஐயா கனகாலமா கவிதை ஒண்டையும் காணலைங்கோ சாமியோவ்...!)இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஒரு போராட்டம் நடாத்தியிருக்கலாமே. அல்லது இலங்கை அரசிற்கு உறைக்க கூடிய விதத்தில் ஏதாவது செய்து இருக்கலாமே. இல்லையே. உங்கள் தமிழ்நாட்டுக் கடல் மூலமாகத்தான் இராணுவ கவசவாகனங்கள் வந்தன என தினத்தந்தி நாளேடு தனது 26-01-2009 பிரதியில் படம் மூலம் புட்டுப்போட்டது. நாம் ஆயுத உதவி செய்யவில்லை என்ற மத்திய அரசின் கூற்று பொய் என்று சொல்வதை நிரூபிக்க இதை தவிர வேறு வழியில்லை.
ஆனால் தலைவன் எடுக்கும் அந்த காட்டமான முடிவால் வரும் எல்லா எதிர் விளைவுகளையும் எல்லா மக்களும் அனுபவிக்கத்தயாராக இருக்க வேண்டும். அதுதான் நியதி. காத்திருப்போம் அந்தக் கணத்திற்காக. வெல்வோம். வாழ்வோம். வரலாறாவோம்."தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"
Thursday, January 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தம்பி ஹிஷாமுக்கு
இனிய வணக்கம் தம்பி ஹிஷாம் எப்படி இருக்கிறீர். கஸ்டப்பட்டு முன்னுக்கு வந்து இப்ப வானொலின் உதவி முகமையாளராக இருக்கிறீர். வாழ்த்துகிறேன். வெற்றி வானொலி தமிழ் மக்களுக்காக சார்பாக செய்திகளை வெளிட்டு வரும் ஒரு வானொலி. லோசன் தம்பியும் ஆதரவு. நீர் இலங்கை அரசாங்கத்தின் சுயாதீன டிவிலையும் செய்தி வாசிப்பாளராக இருக்கிறீர். அதோட செய்தியையும் தமிழில தொகுக்குறது நீர்தான் எண்டு கேள்விப்பட்டேன். இலங்கை அரசு கூறும் பொய்யான செய்திகளை வாய்கிழிய வாசித்து விட்டு வெற்றியில ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்தியை வாசிப்பதுதான் எனக்கு என்போன்றவருக்கு சங்கடமா இரு;குது தம்பி. இதப்பத்தி கொஞ்சம் தெளிவை உமக்குள்ள கொண்டுவரப்பாரும்.
முன்பு சுயாதீன தொலைக்காட்சியில வேலை செய்தவர் ஒருவர்தானாம் இப்ப வானொலி நிறுவனத்தில பெரிய ஆளாய் இருக்கிறாராம். அவர் மூலமா உமக்கு வானொலியில இந்த பதவி கிடைத்ததென்று ஒரு தகவலும் உலாவுகிறது. நீர் தமிழ் மக்களுக்கு வேதனை தரக்கூடியவாறு ஒருபோதும் நடக்கமாட்டீர் எண்டு நான் கொஞ்சம் நம்புறன்.
இப்படிக்கு அன்புள்ள
Post a Comment