Thursday, April 16, 2009

சக வலைப்பதிவர் உண்ணாவிரதம்.....!

அல்லும் பகலும் செத்து மடிந்து கொண்டிருக்கு ஈழத்தமிழன் நிலை மிகவும் வருந்தத்தக்கது. களத்திலே அவர்களின் துயரை எல்லாம் புலத்திலே வாழும் எம்தமிழ் உறவுகள் இந்த உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றனர். ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரச அலுவலக முற்றுகை, தனித்தனியான பிரசாரம் என அவர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு செய்து கொண்டே இருக்கிறார்கள். இப்போது ஏராளமான இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற அகிம்சை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.

இதன் ஓர் அங்கமாக ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் இளம் பத்திரிகையாளரும் சக வலைப்பதிவாளருமான தெய்வீகன் மற்றும் 3 பேரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இவரது பத்தி எழுத்துக்கள் குறிப்பாக தமிழ்நாதம் இணையத்தளத்தில் வெளியாகுவது அனைவரும் அறிந்ததே. இதை தவிர அங்குசம், அலையோசை என்ற இரு வலைப்பூக்களும் இவருக்கு சொந்தம்.

-----------------------------------------------------------------------------------

1987 ம் ஆண்டு தியாகி திலீபன் தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்திலே எம் ஈழத்தமிழ் உறவுகளை கேட்டுக்கொண்டது இந்த மக்களின் எழுச்சியைத்தான். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்" இதுதான் திலீபனின் தாரக மந்திரம். அது இன்று புலம்பெயர் நாடுகளில் நடந்துகொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக தாயகத்தில் இந்த எழுச்சி உருவாக முடியாத சூழல். இன்று அனைத்து மக்களும் தங்களால் என்ன முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில் அவர்களின் இந்த அளப்பரிய செயலுக்கு நிச்சயம் பலன் உண்டு. இதை தடுக்கவும், குழப்பவும் சிறி லங்கா அரச தூதுவராலயங்கள் பகிரதப்பிரயத்தனம் மேற்கொள்ளுகின்றனர். இருந்தும் ஆத்மார்த்தமான மக்களின் எழுச்சியை இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அது முடியவே முடியாது. இருந்தும் திரை மறைவில் அந்தந்த நாட்டு அரசுக்கு நச்சரிப்பதும் போட்டு கொடுப்பதும் என தன்னுடைய 'நரி' வேலைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

மக்களின் இந்த உளப்பூர்வமான எழுச்சிக்கு முன்னால் எல்லாம் தூசி என்பது அந்த வெள்ளைக்கார துரைக்கு மிக நன்றாக தெரியும். அவர்களும் இந்த உணர்வு பூர்வமான எழுச்சி போராட்டங்களையும், கோரிக்கைகளையும் நன்றாகவே அவதானித்து வருகிறார்கள். இந்த போராட்டங்கள் உடனடியாக எமக்கு ஏதாவது பெற்றுதர வேண்டும். இல்லையேல் அங்கு எமது வன்னி மக்கள் உயிர்களை குடிக்க சிறிலங்கா அரச படைகள் தயாராக உள்ளன. காலத்தை சிறிதளவு தன்னும் விரயமாக்காமல் விரைந்து நடவடிக்கை எடுப்போம். அந்தந்த நாடுகளில் எமது மக்களின் அமைப்புகள் என்ன என்ன செய்கிறார்களோ அதனோடு நாமும் இணைவோம். எம் மக்களைக் காப்போம். தாயகத்தை மீட்போம்.

-------------------------------------------------------------------------------------------

கடந்த வருடம் மாவீரர் தின உரையில் தேசியத்தலைவர் அவர்கள் இறுதியாக ஒன்றை தெரிவித்தார். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இளையோருக்கு நன்றி தெரிவித்தும் தொடர்ந்தும் தமது முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த தலைவனின் ஆணையை இன்று புலத்தில் வாழும் அனைத்து இளையோரும் நிறைவேற்றத் துடிப்பது போற்றுதலுக்குரியதே.

அன்பான உறவுகளே! இப்பொழுதுதான் பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரனின் உடல் நிலை மோசமடைவதாகவும் மக்கள் கண்ணீரோடு கனத்த இதயங்களோடு பார்வையிட்டு வணங்குவதாகவும் செய்தியை வாசித்தேன். நெஞ்சு உடைகிறது. துக்கம் தாள முடியவில்லை.

---------------------------------------------------------------------------------------

இன்றும் விடுதலைப் புலிகளின் பழைய பிழைகளை பேசி மகிழ்வோரும் (கலைஞர் ஐயா உட்பட), தற்கால பின்னடைவுகளை கண்டும் உள்ளம் பூரிப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை விட்டு விடுங்கள். இவற்றை கருத்திலே எடுக்காமல் நடவடிக்கைகளை செய்வோம். எமக்கான காலம் காத்திருக்கிறது. களத்திலேயும், தளத்திலேயும் வெல்வோம்.

"தமிழரின் தாகம்! தமிழீழ தாயகம்!!"

6 comments:

Anonymous said...

ellarum etho thankalukku therinjathai seikinam. parppom enna nadakkuthu endu. Please give his blog links.

nalanvurumpi said...

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்" இதுதான் திலீபனின் தாரக மந்திரம். அது இன்று புலம்பெயர் நாடுகளில் நடந்துகொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக தாயகத்தில் இந்த எழுச்சி உருவாக முடியாத சூழல். இன்று அனைத்து மக்களும் தங்களால் என்ன முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில் அவர்களின் இந்த அளப்பரிய செயலுக்கு நிச்சயம் பலன் உண்டு.......................மீண்டும் ஞாபகபடுதியதுக்கு நன்றிகள்

ராஜ நடராஜன் said...

தற்போதைய காலகட்டத்தில் தமிழர்களின் உரிமைகளை முன்னெடுத்துச் செல்வது புலம்பெயர்ந்த மக்களால் மட்டுமே முடியும்.

சாந்தி said...

தியாகி திலீபன் 22ஆண்டுகள் முன்னர் நல்லைநகர் வீதியில் தானுருகித் தமிழனின் உரிமை வேண்டிக் காந்திதேசத்துடன் போராடி மரணித்தார். இன்று மீளவும் தமிழகத்தின் வஞ்சகத்தால் அழியும் ஈழத்தமிழருக்காக உலகெங்கும் தமிழினம் அணிதிரண்டு நிற்கிறது.

வெல்வோம் என்ற நம்பிக்கைகளோடு புலமெங்கும் போராடுகிறோம்.

பரமேஸ்வரன் உட்பட உண்ணாநோன்பிருக்கும் உறவுகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் திலீபன் போல இவர்களை நாமும் இழந்துவிடுவோம்.

சாந்தி

சவுக்கடி said...

///தெய்வீகன் மற்றும் 3 பேரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.///

பாராட்டுகிறோம்!

அவர்களின் உணர்வுக்குத் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்!

லூசன் said...

அன்பானவர்களே! இதை எல்லோரிடமும் எடுத்து செல்லுங்கள். எத்தனை எத்தனை சுமர் சுமந்தாலும், இறுதியில் தர்மம் வெல்லும். கடந்தகால கசப்புகளை மறப்போம். ஊர் கூடித்தேர் இழுக்கும் உன்னத நேரம். பார்வையாளர் எவரும் வேண்டாம். பங்காளிகளாக மாறுவோம். நசுக்க எத்தனையோ சதிகள் நடக்கும். முறியடிப்போம். ஒடுக்க எல்லோரும் ஒன்றினைவர். நாம் அவற்றை அம்பலப்படுத்தி திட்டத்தை தவிடு பொடியாக்குவோம். நன்றி அன்பர்களே! எமக்கான காலம். புலம் பெயர் தமிழர்களின் காலம். இப்பொழுது எல்லாமே எங்கள் கைகளில். வெல்வோம். வாழ்வோம்.