இன்று உலகத்தமிழர் நாவெல்லாம் உச்சரிக்கும் ஒரே பெயர் கிளிநொச்சி. காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகரம் போல இருந்த அழகிய மாவட்டத்தை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்து விட்டது. இது இப்போதைக்கு வெகுவாக பேசப்படப்போகின்ற ஒரு விடயம். எல்லோரும் தமது தலைகளை பிய்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதாவது "ஏன் விடுதலைப்புலிகள் பின்வாங்கினார்கள்?". நிற்க.
சமாதான காலத்தில் இந்த கிளிநொச்சி நகரமே அனைத்துலக தொடர்பாடலுக்குமான முக்கிய நகரமாக இருந்தது. இதனை விடுதலைப் புலிகள் நன்கு திட்டமிட்டு அசத்தலான கட்டுமானங்களுடன் அழகாக எழுச்சி கொள்ள வைத்தனர். வெளிநாட்டு இராஜதந்திரிகளின் சந்திப்புகள், மீள்கட்டுமான கலந்துரையாடல், புலம்பெயர் தமிழரின் வருகை என இந்த நகரம் எப்போதும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது.
ஏ-9 நெடுஞ்சாலையில் செல்லும் போதே நாம் இதனை கண்கூடாக காணலாம். தமிழீழ அரசியல் துறை நடுவப்பணியகம், தமிழீழ காவல்துறைக்கான நடுவப்பணியகம், தமிழீழ நீதிமன்று, சமாதானச் செயலகம் என எல்லாம் இந்த நெடுஞ்சாலைகளை அண்டியதாக இருந்தது. இப்படி எழுச்சியுறும் நகரம் வீழ்ச்சியடையும் என எவரும் நினைக்கவில்லை.
இப்போது இந்த நகரம் இராணுவம் வசம். ஆள் அரவம் அற்ற ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. போரியல் முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்ற ஆராய எனக்கு தெரியாது. பரந்தன் சமரில் விடுதலைப் புலிகள் சடுதியாக பின்னகர்வை மேற்கொள்ள, கிளிநொச்சியின் ஸ்திரத்தன்மை வலுவிழக்க, அது இராணுவ வசம் இலகுவாக வீழ்ந்தது.
வடக்கிலேயும் சரி கிழக்கிலேயும் சரி நிச்சயமாக இராணுவத்தின் பாதைகளை விடுதலைப் புலிகள் தான் தீர்மானிக்கிறார்கள். இது இராணுவத்தின் பலத்தினால் கிடைக்கும் வெற்றியல்ல. அதுக்காக இராணுவம் பலகீனப்பட்டதென்பதல்ல. கிளிநொச்சி இராணுவம் கைகளில் வீழ வேணுமா? அல்லது வீழும் காலம் தாமதமாக வேணுமா? எல்லாமே விடுதலை புலிகளால் தான் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் கிளிநொச்சியை விட்டு பின்னகர்கிறார்கள் எனும் போது எதிரிக்கு எந்த தடயமும் கிடைக்கக் கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார்கள். மக்களும் தமக்கு தேவையான எல்லாவற்றையும் அப்புறப்படுத்திவிட்டார்கள். கடைகள் கூட சுருக்கு கதவுகள், கூரைகள் எல்லாம் கழற்றப்பட்டு பிறிதோர் இடத்துக்கு நகர்த்தப்பட்டு விட்டது. இது இராணுவம் வெளியிட்ட புகைப்படங்களில் கண்கூடாகத் தெரிகிறது.
எனவே இராணுவத்தின் பலமான தாக்குதலின் பின்னர் கிளிநொச்சி வீழவில்லை என்பது உறுதி. ஏனைய சண்டைகளில் கூட இராணுவம் விடுதலைப் புலிகளின் சடலங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆனால் கிளிநொச்சி மீதான கடைசி சண்டையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே கிளிநொச்சியை கைவிடுவது என விடுதலைப் புலிகள் நன்கு தீர்மானித்து திட்டமிட்டு பின்னகர்ந்திடுக்கிறார்கள். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இதனை எல்லோரும் நன்கு உணர்வார்கள்.
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே! தமிழனுக்கென்றொரு நாடு இல்லை. அதே நேரத்தில் தமிழன் இல்லாத நாடும் இல்லை. நாம் மிக விழிப்பாக இருந்து இந்த தருணத்தில் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற எம்மால் ஆன பங்களிப்புகளை செய்யவேண்டும். இப்படி என்ற உடன் யாரும் பணத்தை முன்னிறுத்த வேண்டாம். அனைத்து தேசத்திலும் வாழும் மக்களினதும், எமது தாயகத்தில் இருந்து அந்நிய ஆக்கிரமிப்புக்குள் சிக்கி தமது வாழ்வை இழந்து கொண்டிருக்கின்ற தாயக உறவுகளினதும், எல்லையிலே எதிரியோடு சமராடி எமது தேசத்தை காத்துக்கொண்டிருக்கின்ற எம்களப் போராளிகளினதும் உளவுரனை பாதுக்காக்க வேண்டிய தலையாய கடமை எம்மிடம் இருக்கின்றது. அன்பார்ந்த தேசத்தின் உறவுகளே! உங்களால் இப்போதைக்கு எது முடியுமோ?அதை செய்யுங்கள். அல்லது பொறுப்பானவர்கள் சொல்லுவதை கேட்டு செய்யுங்கள்.
கோலமிட்ட வாசலில் எதிரியின் துப்பாக்கி துளைத்து உறவுகளின் இரத்தக் கோலங்கள் அங்கே. நாம் எதை செய்கிறோம். நாட்டிற்காக எதை செய்தோம். இப்படியான கேள்விகளை எம்முள்ளே கேட்டு, விடுதலையினை விரைவு படுத்துவோம்.
எல்லோருக்கும் மனதிலே ஒரு எண்ணம். சரி நாம் இதை செய்தால் விடுதலைப்புலிகள் இதை செய்வார்களா. எல்லோரும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். 1998 ம் ஆண்டு இதைவிட மோசமான நிலையில் விடுதலைப் போராட்டம் இருந்தது. மிகச்சிறிய ஒரு செவ்வக வடிவிலான பெட்டி நிலப்பரப்பு மட்டும்தான் இருந்தது. அப்போது கடற்பரப்பு கூட பெரிதாக விடுதலைப் புலிகளின் கைகளில் இல்லை. அப்போதிருந்த ஆயுத, ஆட் பலங்களை வீட இப்போது அதிகம். மிக நவீன ஆயுதங்கள். எல்லாவற்றிற்கும் சிகரமாக வான்படை உள்ளது. இன்னமும் களத்திலே மிக முக்கிய படையணிகள் இறக்கப்படவில்லை. முழுமையாக ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை. ஏன் நாம் பயப்பட வேண்டும். ஏன் நாம் குழம்ப வேண்டும்.
அன்பார்ந்த மக்களே! சற்று சிந்திப்போம். விடுதலைப் புலிகள் இப்போது சிறு பிரதேசத்துக்குள் தான். உண்மைதான். ஆனால் இந்த அமுக்கம் வெடிக்கும். அதை படையினர் தாங்குவாரா என்பதுதான் கேள்வி. என்னதான் உலக நாடுகள் கொடுக்கும் ஆயுதங்கள் இருந்தாலும். என்னதான் உலக நாடுகள் முண்டு கொடுத்தாலும் எமது மனோபலத்திற்கு முன்னால் எல்லாம் தூசி. உங்கள் ஆதரவுக்கு முன்னால் எல்லாம் பொடியாகி போய்விடும். இன்றைய தமிழகத்தின் எழுச்சி அதே போன்று புலம் பெயர் நாடுகளின் எழுச்சி மிக்க பொங்குதமிழ் நிகழ்வுகள் என எல்லாம் எமது ஆதரவுக்குரல்களே.
இது போன்று இப்போது தேவை உளவுரனை காக்கும் வகையிலான எமது நேசக்கரம். களத்திலே நிற்கும் போராளிகளுக்கான எமது மனப்பூர்வ ஆதரவு. அல்லும் பகலும் அந்நியப் படைகளின் எறிகணைக்குள்ளும், வான் தாக்குதலுக்கு மத்தியிலும் இருந்தும் கணப்பொழுதும் பிரியாமல் அந்த விடுதலை வேங்கைகளுடனும் போராட்டத்துடனும் இரண்டறக்கலந்த அந்த வன்னி மக்களுக்கான எமது உளப்பூர்வமான ஆதரவினை தெரிவிக்கவேண்டும். எங்களுக்காக நீங்கள் அங்கே. எமக்காக அவர்கள் அங்கே. அவர்களுக்காக நாம்.....? என்ன செய்தோம். என்ன செய்கிறோம். என்ன செய்யவேண்டும். சிந்திப்போம். செயல்படுவோம். மிகுதியினை "தமிழினத் தலைவன்" எங்கள் சூரியத்தேவன் பிரபாகரன் பார்த்துக் கொள்ளுவான்.
பொருத்தமான நேரத்தில் இரண்டு கானொளிக்காட்சிகள்....!
Monday, January 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
உள்வாங்கிய கடல் சுனாமியாக வெளிவரும் பொது அதன் தாக்கங்கள் நினைத்துப்பார்க்க முடியாதவை. வெடிக்கை பார்க்க சென்ற மக்கள் போல இலங்கை இராணுவம் தற்போது நிற்கிறது... விபரீதம் புரியாமல்...! நம்மவர்கள் தாக்கும்போது அது தெரியும்.
அதிகமாக கவலைப்பட ஏதுமில்லை, உயிரிளப்புக்களை தவிர! கிளி பறக்கலாம்... முல்லை பணியலாம்... ஆனால், முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டது. காணாத ஒன்றை நம்பிக்கைவைத்து கடவுள் என வணங்கும் நாம், கண்முன் விரியும் வீர வரலாற்றை கணிக்கமுடியாது மதி மயங்கி தயங்குவதுதான் ஏனென புரியவில்லை... காத்திருப்பின் எல்லை இன்னும் காத்திருக்க வைக்காது... அளியப்போகும் எதிரி இளைஞர்களுக்குமாய் அஞ்சலி செய்வோம்.
-ஜே.
வணக்கம்.
நீங்கள் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் அன்றைய கால கட்டத்தில். இயக்கத்தில் பெரிய பிளவுகள் இல்லை. இன்று கருனாவின் காட்டிக்கொடுப்பும். பால்ராஜ், தமிழ்செல்வன், மதியூகி அன்ரன் அண்ணாக்களின் இழப்பும் பெரிய பின்னடைவு தானே. அத்துடன் அன்று நமது தலைவர்களுக்கு எல்லாம் இருந்த வயது இளமைத்துடிப்பு இன்று இருக்கின்றதா?
அத்துடன் என்று ஓர் விடுதலைப் போராட்டத்திற்கு பலவந்தமாக ஆட்கள் சிறுவர் சிறுமியர் சேர்க்கப்படுகின்றார்களோ அன்றுடன் அந்தப் போராட்டம் அர்தமற்றதாகி விடுகின்றது. எனவே வி.பு போராட்டம் தோல்வியினை நோக்கி செல்கின்றதோ என்ற அச்சம் உள்ளது.
//நீங்கள் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் அன்றைய கால கட்டத்தில். இயக்கத்தில் பெரிய பிளவுகள் இல்லை. இன்று கருனாவின் காட்டிக்கொடுப்பும். பால்ராஜ், தமிழ்செல்வன், மதியூகி அன்ரன் அண்ணாக்களின் இழப்பும் பெரிய பின்னடைவு தானே. அத்துடன் அன்று நமது தலைவர்களுக்கு எல்லாம் இருந்த வயது இளமைத்துடிப்பு இன்று இருக்கின்றதா?
அத்துடன் என்று ஓர் விடுதலைப் போராட்டத்திற்கு பலவந்தமாக ஆட்கள் சிறுவர் சிறுமியர் சேர்க்கப்படுகின்றார்களோ அன்றுடன் அந்தப் போராட்டம் அர்தமற்றதாகி விடுகின்றது. எனவே வி.பு போராட்டம் தோல்வியினை நோக்கி செல்கின்றதோ என்ற அச்சம் உள்ளது.//
விடுதலைப்போராட்டம் என்ற ஒன்று தோல்வியில் முடிவதானால் அது அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்வதாகவே அர்த்தப்படும். அதுவும் சிங்களத்திடம் அனுசரிப்புகள் என்பது கிடையாது. எனவே போராட்டம் வடிவம் மாறலாம் ஆனால் தொடர்வது தவிர்க்க முடியாதது.
இழப்புகளை பொறுத்தவரை, இந்திய இராணுவத்தின் வருகை, ஆயுத ஒப்படைப்புக்கு பின்னர் சண்டை, பல தளபதிகளை இழந்தது, மணலாறு செக் மேற் நடவடிக்கை, மாத்தையாவின் பிரச்சனை, கிட்டுவின் இழப்பு, ஜெயசிக்குறு வன்னி ஆக்கிரமிப்பு, வரலாற்றில் ஏராளமான கட்டங்களை போராட்டம் கடந்துள்ளது. வயது கூடுவது துடிப்பை குறைக்கும் என்றொரு கணக்கு போரில் தோல்வியடையச் செய்யும் என்பதை விட நீண்ட அனுபவம் போரில் வெற்றியை ஈட்ட சாதகமானது. சிங்களம் மேற்கொள்ளும் அவலங்களை எம்மாலானவரை சர்வதேசத்துக்கு எடுத்துரைப்போமானால் மாற்றங்களுக்கு நாமும் பங்களிக்கலாம்
கடைசி ஒரு புலி இருக்கும் வரை போராட்டம் தொடரும், கடைசி ஒரு புலம்பெயர் தமிழன் இருக்கும் வரை போராட்டத்திற்கான பங்களிப்பு தொடரும். அந்த கடைசி இருவரின் பின்தான் போராட்டம் நிறைவு பெறும் அது வரை போராட்டம் தொடரும், போராட்டவழிமுறைகள் மாறுமே ஒழிய போராட்டம் என் றும் மாறாது.
எத்தனை மாவீரர்களில் தியாகங்கள்...நிச்சயம் அர்த்தம் இல்லாமல் போகாது..
எமக்கு விடிவு நிச்சயம்...
யாரும் கவலைப்பட வேண்டாம். தலைவன் விரல் நீளும் திசையில் விடுதலைப்புலிச் சேனை பாயும். குலை நடுங்க ஓடும் பகை. காலை விடியலுடன் தேசமும் விடியும். நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
Post a Comment